இந்தியா

மதத்தின் அடிப்படையில் பிரச்சாரம் : பா.ஜ.க வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு!

மதத்தின் அடிப்படையில் பிரச்சாரம் மேற்கொண்ட பா.ஜ.க வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதத்தின் அடிப்படையில் பிரச்சாரம் : பா.ஜ.க வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

7 கட்டமாக நடைபெறும் 18 ஆவது மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் ஏப். 19 ஆம் தேதி நிறைவடைந்ததை அடுத்து 89 தொகுதிகளில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று மாலையுடன் நிறைவடைந்தது.

இந்நிலையில் கர்நாடகா மாநிலம், பெங்களூரு தெற்கு தொகுதி பா.ஜ.க வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது மதத்தின் அடிப்படையில் வாக்கு சேகரித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மத அடிப்படையில் வாக்கு கேட்டு சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்ட தேஜஸ்வி சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் பா.ஜ.க வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேபோல், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த 5 கோடி ரூபாயை பறிமுதல் செய்த அதிகாரிகள், இவ்விவகாரம் தொடர்பாக பாஜக வேட்பாளர் சுதாகர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கர்நாடக மாநிலம் சிக்கபல்லாபூர் தொகுதியில் பாஜக சார்பில் சுதாகர் என்பவர் போட்டியிடுகிறார். இதற்கிடையே, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு சில மணி நேரம் முன்பாக அவரிடமிருந்து, கட்டுக்கட்டாக 4 கோடியே 80 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

இதனை வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய அவர் திட்டமிட்டிருந்தது தெரியவந்ததால், தேர்தல் பறக்கும்படையினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, தேர்தல் விதிமுறைகளை மீறி, வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய முயன்ற சுதாகர் மீது மதநாயக்கன்ஹள்ளி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories