தமிழ்நாடு

கோவையில் GPay மூலம் பா.ஜ.க பணப்பட்டுவாடா : தேர்தல் அதிகாரியிடம் தி.மு.க புகார்!

கோவையில் GPay மூலம் பா.ஜ.க பணப்பட்டுவாடா செய்வதாக தேர்தல் அதிகாரியிடம் தி.மு.க புகார் அளித்துள்ளது.

கோவையில் GPay மூலம் பா.ஜ.க பணப்பட்டுவாடா : தேர்தல் அதிகாரியிடம் தி.மு.க புகார்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டில் நாளை காலை 7 மணிக்கு மக்களவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்குகிறது. முன்னதாக கடந்த 20 நாட்களுக்கு மேலாக அரசியல் கட்சிகளின் அனல் பரக்கும் பிரச்சாரம் நடைபெற்றது. நேற்று மாலைதான் பிரச்சாரம் நிறைவடைந்தது. நாளை வாக்கு பதிவையொட்டி அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கோவையில் GPay மூலம் பா.ஜ.க பணப்பட்டுவாடா செய்வதாக தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தி.மு.க கோவை வடக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் பத்ரி தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளித்துள்ளார்.

அதில், "கோவை தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலை தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிராக, தேர்தல் பணிமனையில் இருந்து வாக்காளர்களுக்கு அலைபேசியின் மூலம் அழைத்து வாக்குசேகரிக்கிறார். மேலும் GPay மூலம் வாக்களர்களுக்கு பணம் அனுப்பி வருகிறார்.

மேலும் தேர்தல் நடத்தை விதிகளுக்கு மறாகவும் சட்டவிரோதமாகவும், அவினாசி சாலையில் அமைந்துள்ள பா.ஜ.க தேர்தல் அலுவலகத்தில் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ், அண்ணாமலை மைத்துனர் சிவக்குமார், கிரண்குமார், ஆனந்த், பிரசாந்த், கிருஷ்ணகுமார் ஆகியோர் வாக்களர்களுக்கு போன் செய்து தாமரை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கோரியும் GPay மூலம் பணம் வினியோகம் செய்து வருகிறார்கள். எனவே GPay மூலம் பணம் வினியோகம் செய்பவர்கள் மீதும் பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories