தமிழ்நாடு

”மத வெறுப்புணர்வை தூண்டும் பிரதமர் மோடி” : அமைச்சர் மனோ தங்கராஜ் கண்டனம்!

மத வெறுப்புணர்வை தூண்டும் இறுதி அஸ்திரத்தை தேர்தல் ஆயுதமாக மோடி கையில் எடுத்துள்ளார்.

”மத வெறுப்புணர்வை தூண்டும் பிரதமர் மோடி” : அமைச்சர் மனோ தங்கராஜ் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

18-ஆவது மக்களவை தேர்தலுக்கான தேதி சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது. அதன் படி நாடு முழுவதும் 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களில் உள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கு ஏப்ரல் 19 துவங்கி, ஏப்ரல் 26, மே 7, மே 13, மே 20, மே 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஜூன் 4 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

இந்த தேர்தலில் இந்தயா கூட்டணி vs பா.ஜ.க கூட்டணி என இருமுனை போட்டி ஏற்பட்டுள்ளது. அரசியல் கட்சிகளுக்குள் தொகுதிகள் பங்கீடு செய்யப்பட்டு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி கோவையில் வாகன பேரணி மேற்கொண்டார். மத ரீதியான பிரச்சனை வருக்கூடிய இடமாகக் கோவை இருப்பதால் காவல்துறையினர் வாகன பேரணிக்கு அனுமதி அளிக்க மறுத்தனர்.

ஆனால் பா.ஜ.கவினர் இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து அனுமதி பெற்றனர். நாட்டின் பிரதமரே மத உணர்வைத் தூண்டும் படிதான் நேற்று நடந்து கொண்டார். 1998 ஆம் ஆண்டு கோவையில் குண்டுவெடிப்பு சப்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்.

இந்நிலையில் மணிப்பூர் கலவரத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தாதது ஏன்? என அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைத்தள பதிவில், "இதே போல, குஜராத் கலவரத்தில் இறந்தவர்கள், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்கள், ஒக்கி புயலில் இறந்தவர்கள், மணிப்பூர் கலவரத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தாதது ஏன்?

10 ஆண்டு பாஜக ஆட்சியில் 7.5 லட்சம் கோடி ஊழலும், 8 ஆயிரம் கோடி தேர்தல் பத்திர மோசடியையும் தவிர தாங்கள் சாதித்ததாகச் சொல்லிக்கொள்ள வேறெதுவும் இல்லை. அதனால் வழக்கம் போல மத வெறுப்புணர்வைத் தூண்டும் இறுதி அஸ்திரத்தை தேர்தல் ஆயுதமாக மோடி கையில் எடுத்துள்ளார். இது இந்த தேர்தலில் எடுபடாது." என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories