18-ஆவது மக்களவை தேர்தலுக்கான தேதி சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது. அதன் படி நாடு முழுவதும் 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களில் உள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கு ஏப்ரல் 19 துவங்கி, ஏப்ரல் 26, மே 7, மே 13, மே 20, மே 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஜூன் 4 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
மக்களவை தேர்தல் தேதி மற்றும் 7 கட்டங்களாக நடைபெறும் வாக்குப்பதிவு, தேர்தல் நடை பெறும் கால அளவு என அனைத்தி லும் பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியுள்னன. முக்கியமாக தமிழ்நாடு, கேரளா போன்று சொல்ல முடி யாது என்றாலும், ஓரளவு வன்முறை குறைந்த மாநிலங்களான மகா ராஷ்டிரா (5), ஒடிஷா (4), கர்நாடகா வில் (2) பல கட்ட தேர்தல் வாக்குப் பதிவு அறிவிப்பு சர்ச்சையை ஏற் படுத்தியுள்ளது.
பலத்த சந்தேகம் : மோடியிடம் கேட்டு அறிவிக்கப்பட்டதா?
பிரதமர் மோடி மக்கள் நலத் திட்ட அறிவிப்பு என்ற பெயரில் கடந்த ஜனவரி மாதமே தேர்தல் பிரச்சாரத்தை துவங்கிவிட்டார். தமிழ்நாடு, மகாராஷ்டிரா, உத்த ரப்பிரதேசம், அசாம், ஜம்மு-காஷ் மீர், பீகார் உள்ளிட்ட மாநிலங்க ளுக்கு சுற்றுப்பயணம் மேற் கொண்டுள்ள பிரதமர் மோடி, முக்கி யமாக கடந்த 30 நாட்கள் இடை வெளியில் தமிழ்நாட்டிற்கு 4 முறை வருகை தந்துள்ளார். அதே போல கேரளா, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு மோடி அடிக்கடி சுற்றுப்பயணம் மேற் கொண்டார். பிரதமர் மோடியின் தேர்தல் நேர சுற்றுப்பயணமும், தேர்தல் தேதி அறிவிப்பும் பலத்த சந்தேகத்தை கிளப்பியுள்ளது.
மொத்தம் 7 கட்டங்களாக நடை பெறும் தேர்தலின் முதல்கட்டம் ஏப்ரல் 19 அன்று துவங்குகிறது. முதல் கட்டத் தேர்தல் 21 மாநிலங்க ளில் நடைபெற உள்ள நிலையில், இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 10 மாநிலங்களில் (யூனியன் பிரதேசம் சேர்த்து) முழுமையாக அனைத்து தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மற்ற 11 மாநி லங்களில் குறிப்பிட்ட தொகுதி களுக்கு மட்டுமே வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முக்கியமாக முதல் 3 கட்ட தேர்தல்களில் தமிழ் நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய தென்னிந்திய மாநிலங்களில் வாக்குப்பதிவு நிறைவு பெற்று விடும்.
இந்நிலையில், பிரதமர் மோடி யின் தேர்தல் நேர சுற்றுப்பயணம் மற்றும் தொடர்ச்சியான தென்னிந் திய பயணங்கள் பலத்த சந்தே கத்தை கிளப்பியுள்ளது. இதில் முக்கியமாக முதல்கட்ட தேர்தலி லேயே தமிழ்நாட்டின் மொத்த வாக் குப்பதிவும் நிறைவு பெறும் நிலை யில், பிரதமர் மோடி ஒரே மாதத்தில் பல்லடம், சென்னை, கோவை, திருநெல்வேலி, கன்னியாகுமரி என 4 முறை தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ளதை உற்றுநோக்கினால், முதற்கட்ட தேர்தல் நடைபெறு வதன் காரணமாகவே மோடி அடிக் கடி தமிழ்நாடு வந்தாரா? மக்க ளவை தேர்தல் அறிவிப்பு முன்கூட் டியே மோடியிடம் கொடுக்கப் பட்டதா? இல்லை பிரதமர் மோடி யிடம் தேர்தல் அறிவிப்பு திட்டத்தை வாங்கி அதனை தேர்தல் ஆணை யர் ராஜீவ் குமார் அறிவித்தாரா? என பல்வேறு சந்தேக கேள்விக் கணைகள் எழுந்துள்ளன.
தேர்தல் ஆணையத்துக்கு கண்டனம்
பிரதமர் மோடிக்கு வசதியாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள தாக தேர்தல் ஆணையத்துக்கு திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி கண்டனம் தெரிவித்துள் ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் அவர் கூறுகை யில்,”பிரதமர் மோடிக்கு தேர்தல் தேதி முன்கூட்டியே தெரிந்து இருக்கிறது. தேர்தல் தேதி முன்கூட் டியே தெரிந்ததால்தான் முதல்கட்ட தேர்தல் நடைபெறவுள்ள தமிழ் நாட்டுக்கு முன்கூட்டியே வந்து சென்றுள்ளார் மோடி. பல்லடம், மதுரை, சென்னை, குமரி, கோவை என தன் கட்சி பிரச்சார கூட்டங்களை முன்னரே மோடி நடத்தியுள்ளார்” என கூறியுள்ளார்.
- நன்றி தீக்கதிர்