மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் நேற்று முன்தினம் இரவிலிருந்து அதி கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதையடுத்து உடனே அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி ஊழியர்கள் களத்தில் இறங்கி வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு நிவாரண முகாம்களில் தங்கவைத்து வருகிறனர்.
மேலும் வெள்ளம் அதிகமாகத் தேங்கியுள்ள இடங்களில் படகுகள் மூலம் தேசிய பேரிடர் மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் மக்களைப் பாதுகாப்பாக மீட்டு நிவாரண முகாம்களுக்கு அழைத்துச் சென்று வருகின்றனர்.
இந்நிலையில் காரப்பாக்கம் பகுதியில் வசித்து வரும் நடிகர் விஷால் மழை வெள்ளத்தில் சிக்கிக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் சமூகவலைதள பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் "எனது வீட்டிற்குள் தண்ணீர் புகுந்து விட்டது. காரப்பாக்கத்தில் நீர் மட்டம் மிக மோசமாக உயர்ந்து வருகிறது. மின்சாரம் இல்லை. வைஃபை இல்லை. போன் சிக்னல் இல்லை. மொட்டை மாடியில் மட்டுமே எனக்கு சில சிக்னல் கிடைக்கிறது. எனக்கும் இங்குள்ள பலருக்கும் ஏதாவது உதவி கிடைக்கும் என்று நம்புகிறோம்" என பதிவிட்டிருந்தார்.
இன்று அப்பகுதிக்குச் சென்ற தமிழ்நாடு தீயணைப்பு வீரர்கள் நடிகர்கள் ஆமீர்கான் மற்றும் விஷாலை விஷால், அவரது குடும்பத்தினரை மீட்டனர். இதையடுத்து தமிழ்நாடு அரசுக்கு நடிகர் நடிகர்கள் ஆமீர் கான் மற்றும் விஷ்ணு விஷாலை விஷால் நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில்,"சிக்கித் தவிக்கும் எங்களைப் போன்ற மக்களுக்கு உதவிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு நன்றி. காரப்பாக்கத்தில் மீட்புப் பணிகள் தொடங்கியுள்ளன.ஏற்கனவே 3 படகுகள் செயல்படுவதைப் பார்த்தேன். இதுபோன்ற சோதனையான காலங்களில் தமிழக அரசின் சிறப்பான பணி. அயராது உழைக்கும் அனைத்து நிர்வாக மக்களுக்கும் நன்றி." தெரிவித்துள்ளார்.