தமிழ்நாடு

“கல்விக்காக அதிக நிதி ஒதுக்கியுள்ளது தமிழ்நாடு அரசு.” - அமைச்சர் தா.மோ.அன்பரசன் பெருமிதம் !

இதுவரை இல்லாத அளவில் இந்த நிதியாண்டில் ரு.38 ஆயிரம் கோடி கல்விக்காக ஓதுக்கீடு செய்த மாநிலம் தமிழ்நாடுதான் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.

“கல்விக்காக அதிக நிதி ஒதுக்கியுள்ளது தமிழ்நாடு அரசு.” - அமைச்சர் தா.மோ.அன்பரசன் பெருமிதம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி செங்கல்பட்டு மாவட்டம், சார்பாக மாவட்ட அளவிலான கலைத்திருவிழா 2023 - 2024, மாவட்ட அளவிலான மாணவ மாணவிகள் போட்டிகள் துவக்க விழா இன்று செங்கல்பட்டில் தனியார் பள்ளியில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.ர.ராகுல்நாத் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவினை குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி்.செல்வம், சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொருப்பு) வெற்றிச்செல்வி, செங்கல்பட்டு நகர மன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்துக்கொண்டனர்.

“கல்விக்காக அதிக நிதி ஒதுக்கியுள்ளது தமிழ்நாடு அரசு.” - அமைச்சர் தா.மோ.அன்பரசன் பெருமிதம் !

அப்போது இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியது பின்வருமாறு :

“மாணவ, மாணவிகளின் கலைத்திறனை வெளி கொண்டுவரவேண்டும் என்ற நோக்கில் முதலமைச்சர் அவர்கள் கலைத்திருவிழாவை வட்டார அளவிலும் மாவட்ட அளவில் மற்றும் மாநில அளவிலும் நடத்துகிறார். கல்வி, விளையாட்டு, ஒழுக்கம் ஆகியவையும் மாணவர்கள் வளர்த்துகோள்ள வேண்டும், சமுதாய சிந்தனையுடன் சேவை மனப்பாண்மையும் மாணவர்கள் வளர்த்துக்கொள்ளவேண்டும். மாணவர்கள் செல்போன்களை நல்லதற்கு மட்டுமே பயன்படுத்தவேண்டும். சிந்தனையை சிதரவிடாமல் தங்களது இலக்கை நிர்ணயத்து அதனை அடைய முழுமூச்சுடன் செயல்படுத்தவேண்டும்.

தமிழ்நாடு அரசை பொறுத்தவரை கல்வி மற்றும் மருத்துவ துறைக்கு முக்கியத்தும் அளித்து வருகிறது. இதுவரை இல்லாத அளவில் இந்த நிதி ஆண்டில் ரூ.38 ஆயிரம் கோடி கல்விக்காக ஓதுக்கிடு செய்த மாநிலம் தமிழ்நாடுதான். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கவேண்டும் என்ற நோக்கில் நமது அரசு பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டு வந்துள்ளது.

குறிப்பாக காலை உணவு திட்டம். ரூ.500 கோடி மதிப்பில் தமிழ்நாடு முழுவதும் உள்ள தமிழ்நாடு அரசு தொடக்கபள்ளிகள் 17 லட்சம் மாணவ குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை இந்தியாவில் முதன்முதலில் கொண்டு வரப்பட்டுள்ளது. மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக வகுப்பறை இல்லாமல் மரத்தடி மற்றும் வராண்டாவில் பாடம் சொல்லிகொடுக்கும் நிலை இருந்தது. இதனை போக்க முதலமைச்சர் அவர்கள் பேராசிரியர் அன்பழகனார் கல்வி மேம்பாட்டு திட்டம் என்று கொண்டுவந்து ரூ.7 ஆயிரம் ஓதுக்கி பள்ளி கட்டிடம் கட்ட முதலமைச்சர் உத்தவிட்டார்.

“கல்விக்காக அதிக நிதி ஒதுக்கியுள்ளது தமிழ்நாடு அரசு.” - அமைச்சர் தா.மோ.அன்பரசன் பெருமிதம் !

அதன்படி கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. விலையில்லா மிதிவண்டிகள் கடந்த நிதி ஆண்டில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.335 கோடியே 9 லட்சம் மதிப்பில் 4 லட்சத்து 89 ஆயிரம் மிதிவண்டிகள் வழங்கியுள்ளோம்/ கிராமபுற மாணவர்களுக்கு தொழில்கல்விக்கு 7.5 சதவித மாணவர்களுக்கு கல்வி செலவை அரசே ஏற்கும் என்ற உத்தரவிட்டு அதை நடைமுறைபடுத்தியவர் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

மேல்படிப்புக்கு செல்லும் மாணவிகளுக்கு இடைநிறுத்தம் இருக்க கூடாது என்று மாதம் ரூ.1000 மாணவிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. இதன்மூலம் 12 லட்சம் மாணவிகள் பயன்பெருகின்றனர். அரசின் நல்லதிட்டங்களை பயன்படுத்தி நன்குபடிக்கவேண்டும். எதிர்கால தூண்களாக உருவாக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தும் அரசாக தமிழ்நாடு அரசு செயல்படுகிறது. இந்த சலுகைகளை பயன்படுத்தி மிக சிறப்பாக படித்து உதிர்காலத்தில் மருத்துவர்களாக, பொறியாளர்களாக, தொழில் வல்லுனர்களாக உருவாகவேண்டும்”

banner

Related Stories

Related Stories