தமிழ்நாடு

வில்வித்தையில் உலக சாதனை படைத்த 11ம் வகுப்பு மாணவி: ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கி ஊக்கப்படுத்திய திமுக!

வில்வித்தையில் உலக சாதனை படைத்த பள்ளி மாணவி அர்ஷினிக்கு குன்றத்தூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் ரூ. 1 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.

வில்வித்தையில் உலக சாதனை படைத்த 11ம் வகுப்பு மாணவி: ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கி ஊக்கப்படுத்திய திமுக!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட மணிமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ஹர்ஷினி. 11ஆம் வகுப்பு படித்து வரும் இவர் தனது சிறு வயதிலிருந்தே வில்வித்தை போட்டிகளில் பங்கேற்று பல்வேறு வெற்றிகளைப் பெற்று வருகிறார்.

இந்த வெற்றி உற்சாகத்தை அடுத்து ஒரு மணிநேரத்தில் தொடர்ச்சியாக 713 வில் அம்புகளை எய்து உலக சாதனை படைத்துள்ளார் சிறுமி ஹர்ஷினி. மேலும் சர்வதேச அளவிலான வில்வித்தை போட்டியில் பங்கேற்கவும் தகுதி பெற்றுள்ளார்.

வில்வித்தையில் உலக சாதனை படைத்த 11ம் வகுப்பு மாணவி: ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கி ஊக்கப்படுத்திய திமுக!

தனது ஏழ்மையைப் பொருட்படுத்தாமல் வில்வித்தையில் உலக சாதனை படைத்த ஹர்ஷினிக், புதிய வில் அம்பு வாங்கவும் ஒலிம்பிக் போன்ற சர்வதேச போட்டிகளில் பங்கேற்பதற்காகப் பயிற்சி மேற்கொள்ளும் வகையில் ரூ. 1 லட்சம் தி.மு.க குன்றத்தூர் தெற்கு ஒன்றியம் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் படப்பை மனோகரன் வழங்கினார். இதையடுத்து நிதியுதவி வழங்கியதற்கு மாணவி ஹர்ஷினி நன்றி தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories