மோடி தலைமையிலான ஒன்றிய பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே வேலையின்மை அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா காலத்தில் லட்சக்கணக்கானோர் வேலைகளை இழந்து வீதிக்கு வந்துள்ளனர். மோடி தலைமையிலான ஒன்றிய பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே வேலையின்மை அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா காலத்தில் லட்சக்கணக்கானோர் வேலைகளை இழந்து வீதிக்கு வந்துள்ளனர்.
அதேபோல் பொருளாதாரமும் கடும் சரிவைச் சந்தித்துள்ளது. மக்கள் விலைவாசி உயர்வால் அவதிப்பட்டு வரும் வேலைலும் பெட்ரோல், டீசல், சிலிண்டர் போன்ற வற்றின் விலைகளை ஒன்றிய அரசு தொடர்ச்சியாக உயர்த்தி வருகிறது.
இந்நிலையில் இந்தியாவில் கொரோனா காலத்திற்குப் பிறகு படித்த பட்டதாரி இளைஞரின் வேலையின்மையின் விகிதம் 42 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும் இதில் கவலையளிக்க கூடிய விசயம் என்னவென்றால், 25 வயதிற்குட்பட்ட பட்டதாரிகள் என்பது அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டது.
மேலும் பெண் வேலையின்மை பிரச்சினையில், 2019 ஆம் ஆண்டு முதல், சுயதொழில்களில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக இது உயர்ந்துள்ளது என்று அறிக்கை கூறுகிறது. கோவிட்க்கு முன் 50% பெண்கள் சுயதொழில் செய்து வந்தனர், ஆனால் கோவிட்க்குப் பின் இது 60% ஆக உயர்ந்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.