சென்னை அடையாரைச் சேர்ந்த ஒரு நபர், சென்னை காவல் ஆணையாளரிடம் கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி அன்று கொடுத்த புகார் ஒன்றை கொடுத்தார். அந்த புகாரில், பகுதி நேர வேலை செய்வதற்காக ஆன்லைனில் தன்னை வாட்ஸ்அப்பில் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர், டெலிகிராம் மூலம் தொடர்பு கொண்டார். அதனை நம்பி அவர்கள் கொடுத்த பல்வேறு வங்கி கணக்குகளுக்கு ரூ.12 லட்சத்து 22 ஆயிரம் வரையிலான பணத்தை டெபாசிட் செய்ததேன். ஆனால் தான் செலுத்திய தொகை ஏதும் தனக்கு திரும்ப வரவில்லை. பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தேன். எனவே அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கு வேண்டும் என தெரிவித்திருந்தார்.
மனுதாரர் கொடுத்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு போலிஸார் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், புகார்தாரர் பணம் செலுத்திய வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் வங்கி கணக்குகளுடன் தொடர்புடைய மொபைல் எண் விவரங்கள் முகவரிகள் மற்றும் அடையாள விவரங்கள் போன்றவைகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் போலிஸாரின் தீவிர விசாரணையில் இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து காவல்துறை தரப்பில் வெளியிட்டப்பட்ட செய்திக் குறிப்பில், விசாரணையில் குற்றவாளி சென்னை மணலி -மிலிருந்து இந்த குற்றத்திற்காக வங்கி கணக்கு தொடங்கி அதனை வெளிநாட்டில் இருக்கும் மோசடிகாரர்களிடம் கொடுத்து மக்களை ஏமாற்றியது தெரியவந்ததின்பேரில் தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
புலன் விசாரணையில் போலியாக ஒரு வங்கி கணக்கு தொடங்க முதலில் ரூ.60,000/- வரை பெறப்பட்டதாகவும் அந்த வங்கி கணக்கினை 1.முகமது இலியாஸ் ஆ/ 38, த/பெ.முகமது உசேன், மணலி, சென்னை என்பவர் தொடங்கி 2.தமிழ்செல்வம் ஆ/44. த/பெ.அப்பாதுரை, அண்ணாநகர் கிழக்கு சென்னை என்பவரிடம் ஒப்படைத்ததாகவும் தெரிவித்தார் அதன்பேரில் முகமது இலியாஸ் மற்றும் தமிழ்செல்வம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு போலி ஆவணங்களை வைத்து தொடங்கிய வங்கி கணக்குகளை Hong Kong யில் உள்ளவருக்கு அனுப்புவதை இருவரும் வாடிக்கையாக கொண்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
அவ்வாறு போலியாக உருவாக்கப்பட்ட வங்கி கணக்குகள் ஆன்லைன் பகுதிநேர வேலைவாய்ப்பு மோசடிக்காக பயன்படுத்தியுள்ளனர். இக்குற்ற செயலுக்காக பயன்படுத்தப்பட்ட 7 செல்போன்கள், 1 லேப்டாப் மற்றும் 1 நிறுவன சீல் ஆகியவை அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டன 2 குற்றவாளிகளும் சென்னை எழும்பூர் கூடுதல் தலைமை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு இன்று (09.09.2023) நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். மோசடிக்காக உபயோகப்படுத்தப்பட்ட வங்கி கணக்கில் ரூ.12 லட்சம் முடக்கப்பட்டது. மேலும் மேற்கண்ட எதிரிகள் இருவர் மீதும் ஏற்கனவே பாண்டிச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்தது.
ஆன்லைன் பகுதி நேர வேலை மோசடியில் பாதிக்கப்பட்டவர் பெரும்பாலும் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் மூலம் ஈர்க்கப்படுகிறார்கள், மேலும் அவர்கள் டெலிகிராமில் ஒரு குருப்பில் இணைக்கப்பட்டு யூடியூப் வீடியோக்களுக்கு லைக் செய்வது. ஓட்டல்களுக்கு ரிவியூ எழுதுவது அல்லது கிரிப்ட்டோ கரன்சியில் டிரேடு செய்வது போன்ற டாஸ்க்களில் ஈடுபடுகின்றனர்.
ஆரம்பத்தில் ரூ.150 முதல் லாபம் பெறுகின்றனர். அதே உத்வேகத்தில் அவர்களை டெலிகிராமில் ஐம்பது பேர் கொண்ட குழுவில் இணைக்கப்படுகின்றார்கள். அதில் தொடரவும் மேலும் பணம் சம்பாதிக்கவும் Subscription Fee செலுத்த சொல்லுகின்றனர். இவ்வாறு மற்றவர்களுக்கும் லாபம் கிடைத்ததாக போலி ஸ்கீரின்சாட்களை அதே குருப்பில் ஷேர் செய்கின்றனர். இதனை நம்பி புகார்தாரர்கள் பணத்தை இழக்கின்றனர்.
இதுவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் நிலையத்தில் ஆன்லைன் பகுதி நேர வேலை மோசடி தொடர்பாக 112 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே ஆன்லைனில் பகுதி நேர வேலை தொடர்பான முதலீடுகள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும், ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் 1930 என்ற எண்ணை அணுகுமாறும், ஆன்லைனில் www.cybercrimc.gov.in என்ற இணையதளம் வாயிலாகவும் புகார் அளிக்குமாறு பொதுமக்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப கேட்டுக் கொண்டுள்ளார்