தமிழ்நாடு

தொண்டைக்குள் திறந்த நிலையில் சென்ற Safety Pin.. அறுவை சிகிச்சையின்றி அகற்றிய சேலம் அரசு மருத்துவர்கள் !

பெண் ஒருவரின் உணவு குழாயில் சிக்கி இருந்த Safety Pin யை அறுவை சிகிச்சை இன்றி அகற்றி சேலம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

தொண்டைக்குள் திறந்த நிலையில் சென்ற Safety Pin.. அறுவை சிகிச்சையின்றி அகற்றிய சேலம் அரசு மருத்துவர்கள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 32 வயதான கலா என்ற பெண் நேற்று மாலை, தனது வாயில் Safety Pin வைத்திருந்த போது, தவறி தொண்டைக்குள் சென்றது.. இதனால் அவதிக்கு உள்ளான அந்த பெண், உடனடியாக அங்குள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், உணவு குழாயில் சிக்கி உள்ள ஊக்கை அறுவை சிகிச்சை மூலமாகதாம் அகற்றிட முடியும் எனக் கூறி சேலம் அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு அந்த பெண்ணை அறிவுறுத்தி உள்ளனர்.

இதனையடுத்து சேலம் அரசு மோகன் குமார் மங்கலம் மருத்துவமனைக்கு நேற்று இரவு அந்த பெண் சிகிச்சைக்காக வந்துள்ளார். அங்கு அந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் உணவு குழாயில் ஊக்கு திறந்த நிலையில் சிக்கி இருப்பதை கண்டறிந்தனர்.

மேலும் காலதாமதம் ஏற்பட்டால் உணவுக்குழாயை கிழித்து மூச்சுக்குழாய் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் சிக்கியிருந்த ஊக்கை ( safety pin ) உடனடியாக அகற்றிட முடிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து இரைப்பை மற்றும் குடல் அறுவை சிகிச்சை துறை தலைவர் சிவசங்கர் மற்றும் சிவசுப்பிரமணியம் தலைமையிலான மருத்துவ குழுவினர் அறுவை சிகிச்சை இன்றி, எண்டோஸ்கோபி மூலமாக உணவு குழாயில் சிக்கி இருந்த ஊக்கை ( safety pin ) அகற்றிட முடிவு செய்தனர்.

தொண்டைக்குள் திறந்த நிலையில் சென்ற Safety Pin.. அறுவை சிகிச்சையின்றி அகற்றிய சேலம் அரசு மருத்துவர்கள் !

அதன் பின்னர் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு சுமார் ஒரு மணி நேரம் போராடி திறந்த நிலையில் இருந்த ஊக்கை ( safety pin ) உணவு குழாயில் எந்த பாதிப்பும் இன்றி வெளியே எடுத்து சாதனை புரிந்தனர்.இதனை எடுத்து அந்தப் பெண் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் நலமுடன் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மிகவும் சிக்கலான வகையில் உணவு குழாயில் திறந்த நிலையில் சிக்கியிருந்த ஊக்கை அறுவை சிகிச்சையின்றி எண்டோஸ்கோபி மூலமாக அகற்றி அரசு மருத்துவர்கள் செய்த சிகிச்சைக்கு அந்தப் பெண்ணின் உறவினர்கள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர்.

banner

Related Stories

Related Stories