தமிழ்நாடு

நீட் திணிப்பு - களத்தில் அமைச்சர் உதயநிதி : நீட் தேர்வை ரத்து செய்ய திமுக எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன?

நீட் திணிப்பு - களத்தில் அமைச்சர் உதயநிதி : நீட் தேர்வை ரத்து செய்ய திமுக எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மருத்துவ படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு - ‘நீட்’ தமிழ்நாட்டில் 2017 ஆம் ஆண்டில் இருந்து 17க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். மேலும் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டில் ‘நீட்’ தோல்வி பயம் காரணமாக தற்கொலைகள் நிகழ்ந்த வண்ணம் இருக்கிறது.

‘நீட்’ தேர்வு நடத்துவதில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கக்கோரி, தமிழ்நாடு சட்டமன்றத்தில் சட்ட முன்வரைவு நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் பரிந்துரைக்கு இரண்டு முறை அனுப்பப்பட்டும் பயன் இல்லை. இந்நிலையில், நீட் தேர்வை ரத்து செய்யாத ஒன்றிய பாஜக அரசையும், ஆளுநர் ரவியையும் கண்டித்து திமுக இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் இன்று போராட்டம் நடைபெறுகிறது. முன்னதாக நீட் தேர்வை ரத்து செய்ய திமுக எடுத்த நடவடிக்கைகள் குறித்த செய்தி குறிப்பை கீழே காணலாம்.

நீட் தேர்வை ரத்து செய்ய திமுக எடுத்த நடவடிக்கைகள்..

13-3-2021 : நீட் தேர்வு ரத்து, மருத்துவக் கல்லூரி இடங்களை மாநிலத் தொகுப்புக்கே கொண்டுவர நடவடிக்கை: திமுக சட்டமன்ற தேர்தல் அறிக்கை

5-6-2021 : நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆராய முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

29-6-2021 : ‘நீட்’ பாதிப்பை கண்டறிய அமைக்கப்பட்ட ஏ.கே.ராஜன் குழுவை எதிர்த்து நீதிமன்றத்தில் பாஜக வழக்கு

30-6-2021 : ஏ.கே.ராஜன் கமிட்டி கண்துடைப்பு நாடகம்: எடப்பாடி பழனிசாமி , எதிர்க்கட்சி தலைவர்

08-7-2021 : நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆராய குழு அமைத்து இருப்பது மாநில அரசின் அதிகார வரம்புகளை மீறிய செயல்: உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு

13-7- 2021 : ஏ.கே.ராஜன் கமிட்டிக்கு எதிராக பாஜக (கரு.நாகராஜன்) தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

14 - 7-2021 : நீட் தேர்வு விவகாரம்: முதல்வர் ஸ்டாலினிடம் ஏ.கே.ராஜன் கமிட்டி ஆய்வறிக்கை சமர்ப்பித்தது

16-7-2021 : தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் எம்.சுப்பிரமணியன், இந்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை டெல்லியில் சந்தித்து மருத்துவ நுழைவுத் தேர்வு 'நீட் 2021' தொடர்பான பிரச்னைகள் குறித்து விவாதித்தார்.

2-9-2021 : நீட் தேர்வுக்கு எதிராக புதிய சட்டம் இயற்றி குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெறப்படும் - சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல்.

11-9-2021 : நீட் தேர்வுக்கு எதிராக நாளை மறுநாள் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

13-9-2021 : நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் சட்ட முன்வடிவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். நீட் விலக்கு மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

14-9-2021 : நீட் விலக்கு மசோதா கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

27-11-2021 : நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு உடனே அனுப்பி வைக்க வேண்டும் என்று கவர்னரை நேரில் சந்தித்து மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

21-12-2021 : நீட் தேர்வு விலக்கு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க திமுக எம்பிக்கள் கோரிக்கை - விவாதிக்க ஒன்றிய பாஜக அரசு மறுப்பு - நீட் விலக்கு மசோதாவிற்கு உடனே ஒப்புதல் வழங்க வலியுறுத்தி மக்களவை, மாநிலங்களவையில் திமுக எம்பிக்கள் பதாகைகள் ஏந்தி முழக்கம்.

29-12-2021 : நீட் விலக்கு மசோதா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, திமுக எம்பி டி.ஆர். பாலு தலைமையில் சென்ற தமிழ்நாடு அனைத்து கட்சி எம்பிக்களை உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்திக்கவில்லை.

29-12-2021: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து நீட் விலக்கு மசோதா விவகாரம் தொடர்பாக மனு அளிக்க திமுக தலைமையிலான எம்.பிக்கள் குழு முயன்றனர். மனுவை தமது அலுவலக செயலாளர் மூலம் பெற்றுக் கொண்டு குடியரசு தலைவர் அனுப்பி வைத்தார்.

5-1-2022 : அனைத்து கட்சி எம்பிக்களை சந்திக்க மறுக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷா வின் செயல் கண்டிக்கத்தக்கது என்று டி.ஆர். பாலு எம்பி பேச்சு

நீட் விலக்கு மசோதா மீது நடவடிக்கை எடுக்காத கவர்னர் பதவி விலக வேண்டும் என்று திமுக எம்பிக்கள் குழு தலைவர் டி.ஆர். பாலு அறிக்கை

6-1- 2022 : அனைத்து கட்சி எம்பிக்களை சந்திக்க மறுக்கும் அமீத்ஷா வின் செயல் கண்டிக்கத்தக்கது என்றும் நீட் தேர்வு விலக்கு பெற போராட்டம் தொடரும் என்றும் சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

நீட் தேர்வு விலக்கு குறித்து விவாதிக்க 8-1-2022 சட்ட மன்ற அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படும் என்று முதல்வர் அறிவிப்பு

8-1- 2022 : நீட் தேர்வு விலக்கு குறித்து விவாதிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்ட மன்ற அனைத்து கட்சி கூட்டம்.

8-1-2022 : நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற சட்டரீதியாக போராட்டம்: முதலமைச்சர் தலைமையிலான அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்

11-1-2022 : தமிழ்நாட்டில் மருத்துவ கல்லூரிகளை திறந்து வைக்கும் ஆன்லைன் நிகழ்ச்சியில், நீட் தேர்வு விலக்கு மசோதாவிற்கு உடனே ஒப்புதல் வழங்க வேண்டும் என்று பிரதமரிடம் நேரடியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

17-1-2022: அனைத்து கட்சி எம்.பி.க்கள் குழு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்குமாறு ஆளுநருக்கு உத்தரவிட கோரியது.

1-2-2022 : பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசுத் தலைவர் உரையின் போது, நீட் விலக்கு மசோதாவிற்கு ஒப்புதல் வழங்க வலியுறுத்தி திமுக எம்பிக்கள் முழக்கம்.

3-2-2022 : நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பினார் கவர்னர்

3-2-2022 : நீட் மசோதாவை திருப்பி அனுப்பிய கவர்னரை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் திமுக வெளிநடப்பு செய்தது

4-2-2022 : கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற கோரும் தனிநபர் மசோதாவை மாநிலங்களவையில் தாக்கல் செய்தார் திமுக எம்பி வில்சன்

5-2-2022 : கவர்னர் நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பியதை அடுத்து, அது குறித்து விவாதிக்க முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது.

5-2-2022 : நீட் மசோதாவை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்க முதலமைச்சர் தலைமையிலான அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்.

5-2- 2022 : நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்ற 8-2-2022 ல் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

8-2-2022 : நீட் விலக்கு மசோதா மீண்டும் தமிழ்நாடு சட்டபேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

15-3-2022 : நீட் உள்ளிட்ட மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்காத தமிழ்நாடு ஆளுந‌ரை நீக்க மக்களவையில் திமுக எம்பி.க்கள் குழு தலைவர் டி.ஆர். பாலு வலியுறுத்தல்.

15-3-2022 : நீட் விலக்கு மசோதாவின் நிலை குறித்து ஆலோசனை செய்ய கவர்னரை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பதாக கவர்னர் உறுதி அளித்தார்.

31-3-2022 : டெல்லி சென்ற முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என பிரதமர் மோடி மற்றும் அமைச்சர் அமித்ஷாவிடம் நேரில் வலியுறுத்தினார்.

14-4-2022 : நீட் விலக்கு மசோதாவை ஒன்றிய அரசுக்கு விரைந்து அனுப்பி வைத்திடக்கோரி ஆளுநர் அவர்களுக்கு முதலமைச்சர் கடிதம் எழுதினார்.

18-4-2022 : நீட் விலக்கு மசோதா குறித்து தேவைப்பட்டால் மீண்டும் அனைத்துக்கட்சி கூட்டம் - சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

4-5-2022 : நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக மத்திய அரசுக்கு அனுப்பினார் ஆளுநர்.

19-7-2022 : நீட் விலக்கு மசோதா விவகாரத்தில் எப்போது ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கால நிர்ணயம் செய்ய முடியாது ; நீட் விலக்கு மசோதா குறித்து ஒன்றிய அமைச்சகங்களின் கருத்து தமிழ்நாடு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது - அமித்ஷா

20-7-2022 : நீட் விலக்கு மசோதா குறித்து மத்திய அரசின் 2 துறைகள் கேட்ட கேள்விகளுக்கு சட்ட வல்லுநர்களின் ஆலோசனையோடு தயாரிக்கப்பட்டுள்ள பதில்கள் ஓரிரு நாளில் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.

17-8-2022 : டெல்லி சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் நீட் விலக்கு மசோதா குறித்து பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.

3-9-2022 : நீட் விலக்கு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதலை பெற்றுத் தர வேண்டும் என தென் மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

18-1-2023 : நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான வழக்குகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது

19-1-2023 : நீட் விலக்கு மசோதா குறித்து மீண்டும் விளக்கம் கேட்டு தமிழ்நாடு அரசுக்கு ஒன்றிய அரசு கடிதம்.

18-2-2023 : நீட் தேர்வை ரத்து செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் புதிதாக மனு தாக்கல் செய்தது திமுக அரசு.

28-2-2023 : டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நீட் தேர்வில் தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

14-8-2023 : தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவுக்கு விரைவில் ஒப்புதல் வழங்க வேண்டும் என குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.

18-8-2023 : நீட் தேர்வை ரத்து செய்யும் முழு பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்; நீட் தொடர்பாக கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற நடவடிக்கை எடுப்பேன்; மக்களை ஏமாற்றமாட்டேன். ஒரு உதயநிதி மட்டுமல்ல மக்களும் போராட முன்வர வேண்டும் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

20-8-2023 : நீட் தேர்வை ரத்து செய்யாத ஒன்றிய பாஜக அரசையும், ஆளுநர் ரவியையும் கண்டித்து திமுக இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் போராட்டம்

banner

Related Stories

Related Stories