தமிழ்நாடு

“தொட்டபெட்டா மலை சிகரத்தில் ரோப் கார் வசதி? - கோடை சீசனுக்கு தயாராகும் நீலகிரி”: அசத்தும் சுற்றுலாத்துறை!

நீலகிரியில் அமைந்துள்ள தொட்டபெட்டா மலை சிகரத்தில் இருந்து மந்தாடா வரை ரோப் கார் அமைப்பதற்கான இடத்தினை சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார்.

“தொட்டபெட்டா மலை சிகரத்தில் ரோப் கார் வசதி? - கோடை சீசனுக்கு தயாராகும் நீலகிரி”: அசத்தும் சுற்றுலாத்துறை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

உலகப் புகழ்பெற்ற சுற்றுலா தலமான நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் வெளிநாடுகளிலிருந்தும், அண்டை மாநிலங்களிலிருந்தும், சமவெளி பிரதேசங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் தமிழ்நாடு அரசு சுற்றுலா துறைகளை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தொட்டபெட்டா மலை சிகரத்தில் இருந்து மந்தாடா வரை ரோப் கார் அமைப்பதற்கான திட்டத்தினை செயல்படுத்தும் வகையில், அதற்குண்டான சாத்திய கூறுகள் உள்ளதா என சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், சுற்றுலாத்துறை அரசு முதன்மை செயலாளர் சந்திப் நந்தூரி மற்றும் மேலாண்மை துறை இயக்குனர் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

“தொட்டபெட்டா மலை சிகரத்தில் ரோப் கார் வசதி? - கோடை சீசனுக்கு தயாராகும் நீலகிரி”: அசத்தும் சுற்றுலாத்துறை!

இதனை அடுத்து பொறியாளர்களிடம் பேசிய சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், தொட்டபெட்டா சிகரத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுற்றுலா பயணி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் சூசைட் பாயிண்ட் பகுதிக்கு சுற்றுலா பயணிகளை அனுமதிக்காமல் தொட்டபெட்டா நிர்வாகம் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், அப்பகுதியில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்புடன் இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்கும் வகையில், கட்டுமான பணிகள் நடைபெறும் எனவும், நீலகிரி மாவட்டத்தில் இன்னும் இரண்டு வாரங்களில் கோடை சீசன் துவங்கவுள்ள நிலையில், தொட்டபெட்டா சிகரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், சுற்றுலா பயணிகள் வசதிக்காக இரண்டு அதிநவீன தொலைநோக்கி கருவிகளை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் என தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories