தமிழ்நாடு

#HBDMKSTALIN70 "தமிழ்நாட்டை பார்த்து இந்தியாவே கற்றுக்கொள்ள வேண்டும்".. தேஜஸ்வி யாதவ் வேண்டுகோள்!

தமிழ்நாட்டில் பின்பற்றப்படும் கொள்கைகளைத் தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் கற்றுக்கொள்ள வேண்டும் பீகார் மாநில துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

#HBDMKSTALIN70 "தமிழ்நாட்டை பார்த்து இந்தியாவே கற்றுக்கொள்ள வேண்டும்"..   தேஜஸ்வி யாதவ் வேண்டுகோள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தி.மு.க தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 70வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மெரினாவில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடங்களில் மலர் வளையம் வைத்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இதைத்தொடர்ந்து சென்னை, பெரியார் நினைவிடத்திற்குச் சென்ற அவர், மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் கோபாலபுரம், சி ஐ டி காலனி இல்லங்களில் கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய முதலமைச்சர், தனது தாயார் தயாளு அம்மாளிடம் வாழ்த்தப்பெற்றார். பின்னர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கழக தொண்டர்களைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

#HBDMKSTALIN70 "தமிழ்நாட்டை பார்த்து இந்தியாவே கற்றுக்கொள்ள வேண்டும்"..   தேஜஸ்வி யாதவ் வேண்டுகோள்!

பின்னர் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, உ.பி. முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த விழாவில் தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலு வரவேற்புரையாற்றினார். இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்த குறும்படம் திரையிடப்பட்டது.

இந்த விழாவில் பேசிய பீகார் மாநில துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ், " இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாருக்கும் இன்றுதான் பிறந்தநாள். என் சார்பாகவும், எனது தந்தை சார்பாகவும் பிறந்தாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சமூக சமத்துவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் இயக்கத்திலிருந்து நாம் வந்துள்ளோம். தி.மு.க பொருளாதார, வேலைவாய்ப்பை உருவாக்க முக்கியத்துவம் அளிப்பது போலப் பீகாரில் நாங்களும் இதையே முன்னெடுத்துச் செல்கிறோம். தற்போது நாட்டில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நடைபெற்று வருகிறது. இதை நாம் முறியடிக்க வேண்டும்.

பா.ஜ.க. ஆட்சியில் நாட்டில் ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது. வலுவான ஒரு மாற்றுச் சக்தியை உருவாக்குவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை இந்தியாவே எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.

#HBDMKSTALIN70 "தமிழ்நாட்டை பார்த்து இந்தியாவே கற்றுக்கொள்ள வேண்டும்"..   தேஜஸ்வி யாதவ் வேண்டுகோள்!

சமூக நீதிக்கு எதிராகச் செயல்படுகிறது ஒன்றிய பாஜக அரசு. சமூக நீதியைப் போதிக்கும் தமிழ்நாட்டை மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும். சமூக நீதிக் கொள்கைகள் கட்சிகள் சந்திக்கும் நாளாக இன்று அமைந்துள்ளது.சோசலிசம் மற்றும் சமூக நீதி கொள்கைகளைக் கொண்ட கட்சிகள் சந்திக்கும் தளமாகத் தமிழ்நாடு மாறிவிட்டது. தமிழ்நாட்டில் பின்பற்றப்படும் கொள்கைகளைத் தேசிய அளவில் எதிர்க்கட்சிகளாக உள்ள கட்சிகள் கற்றுக்கொள்ள வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories