தமிழ்நாடு

#HBDMKSTALIN70 "நாம் ஒன்றிணைந்து சனாதன சக்திகளை விரட்டியடிப்போம்": மல்லிகார்ஜுன கார்கே உரை!

நாம் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும்.சனாதன சக்திகளை விரட்டியடிக்க வேண்டும் என மல்லிகார்ஜுன கார்கே கார்கே தெரிவித்துள்ளார்.

#HBDMKSTALIN70 "நாம் ஒன்றிணைந்து சனாதன சக்திகளை விரட்டியடிப்போம்": மல்லிகார்ஜுன கார்கே உரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தி.மு.க தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 70வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மெரினாவில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடங்களில் மலர் வளையம் வைத்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இதைத்தொடர்ந்து சென்னை, பெரியார் நினைவிடத்திற்குச் சென்ற அவர், மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் கோபாலபுரம், சி ஐ டி காலனி இல்லங்களில் கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய முதலமைச்சர், தனது தாயார் தயாளு அம்மாளிடம் வாழ்த்தப்பெற்றார். பின்னர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கழக தொண்டர்களைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

#HBDMKSTALIN70 "நாம் ஒன்றிணைந்து சனாதன சக்திகளை விரட்டியடிப்போம்": மல்லிகார்ஜுன கார்கே உரை!

பின்னர் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, உ.பி. முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த விழாவில் தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலு வரவேற்புரையாற்றினார். இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்த குறும்படம் திரையிடப்பட்டது.

#HBDMKSTALIN70 "நாம் ஒன்றிணைந்து சனாதன சக்திகளை விரட்டியடிப்போம்": மல்லிகார்ஜுன கார்கே உரை!

இதையடுத்து பேசிய அகில இந்தியக் காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "என்னுடைய வயது 81, ஆகவே எனக்கு வாழ்த்த வயது உள்ளது. பூரண உடல் நலத்துடன் நீண்ட நாள் வாழவேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வாழ்த்துகிறேன்.

பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் நடப்பவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளங்குகிறார். ராஜாஜி, காமராஜர், பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் தமிழ்நாட்டுக்கு ஆற்றிய சேவையை மறக்க முடியாது.

சமூகநீதியைக் காப்பதில் காங்கிரசும் திமுகவும் இணைந்து செயல்படும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த இந்திய ஒற்றுமை பயணம் மாபெரும் வெற்றி பெற்றது. ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தைக் காஷ்மீரில் ஃபரூக் அப்துல்லா முடித்து வைத்தார்.

#HBDMKSTALIN70 "நாம் ஒன்றிணைந்து சனாதன சக்திகளை விரட்டியடிப்போம்": மல்லிகார்ஜுன கார்கே உரை!

ஒன்றிய பா.ஜ.க அரசின் அழுத்தங்களுக்கு தி.மு.க அரசு இடம் தரவில்லை. தமிழ்நாட்டில் பா.ஜ.க ஒரு இன்ச் அளவுகூட வெற்றிபெற முடியாது. ஏனென்றால் தமிழ்நாட்டின் தத்துவம் அப்படியானது. திராவிடக் கருத்தியலைப் பின்பற்றிச் செயல்பட்டு வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பா.ஜ.க.வின் ஒரு கொள்கை கூட மக்கள் நலனுக்கு உகந்ததாக அல்ல. பா.ஜ.க அரசு அரசியல் சாசனத்தையே மாற்ற முயற்சி மேற்கொள்கிறது. இதை நாம் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும்.

சனாதன சக்திகளை விரட்டியடிக்க வேண்டும் . அரசியல் சட்டத்தைப் பாதுகாக்கும் போராட்டத்துக்கு ஸ்டாலின் தலைமை தாங்குவார். திமுக, காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்து 2024 தேர்தலிலும் மிகப்பெரிய வெற்றி பெறும்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories