தமிழ்நாடு

வேலூர் முள்ளு கத்தரிக்காய், ராமநாதபுரம் குண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு: முதலிடம் நோக்கி தமிழ்நாடு!

தமிழ்நாட்டின் பாரம்பரியமான வேலூர் முள்ளு கத்தரிக்காய், ராமநாதபுரம் குண்டு (முண்டு) மிளகாய்க்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

வேலூர் முள்ளு கத்தரிக்காய், ராமநாதபுரம் குண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு: முதலிடம் நோக்கி தமிழ்நாடு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

புவிசார் குறியீடு என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியில் தனித்தன்மையுடன் பாரம்பரியமாகத் விளைவிக்க அல்லது தயாரிக்கப்படும் உணவு வகைகளுக்கு அதன் தரத்தைப் பாதுகாக்கும் விதமாக வழங்கப்படும் சான்று. இந்த புவிசார் குறியீடு பெரும் பொருள், ஒரு மாநிலத்தின் தனித்துவம் பெற்ற சிறப்புமிக்கதாக இருக்கும்.

இதே போன்ற தனித்துவம் பெற்றக் காரணிகளின் அடிப்படையில், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப் பகுதியில் விளையும், மலைப்பூண்டுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து திண்டுக்கல் பூட்டுக்கும், காரைக்குடி கண்டாங்கி சேலை, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாக்கும் மத்திய அரசின் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

வேலூர் முள்ளு கத்தரிக்காய், ராமநாதபுரம் குண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு: முதலிடம் நோக்கி தமிழ்நாடு!

இந்நிலையில் இந்தாண்டு தமிழ்நாட்டின் பாரம்பரியமான வேலூர் முள்ளு கத்தரிக்காய், ராமநாதபுரம் குண்டு (முண்டு) மிளகாய்க்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு அரசு சார்பில் புவிசார் குறியீடு பெறுவதற்காக இந்த ஆண்டு விண்ணப்பிக்கப்பட்டுள்ள 10 பொருட்களுக்கு, புவிசார் குறியீடு கிடைக்குமாயின் இந்திய அளவில் அதிகப்படியான பொருள்களுக்கு புவிசார் குறியீடு பெற்ற மாநில தமிழ்நாடு தான்.

தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக விளையும் வேலூர் இலவம்பாடி முள்ளு கத்தரிக்காய், ராமநாதபுரம் குண்டு (முண்டு) மிளகாய்க்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், புவிசார் குறியீடு அங்கீகாரம் பெற்ற தயாரிப்புகளின் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்து, தமிழ்நாடு இந்தியா அளவில் 2-வது இடத்தில் உள்ளது. கர்நாடகா 46 அதிகபட்ச புவிசார் குறியீடுகளைப் பெற்றுள்ளது. கேரளா 36 தயாரிப்புகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

வேலூர் முள்ளு கத்தரிக்காய், ராமநாதபுரம் குண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு: முதலிடம் நோக்கி தமிழ்நாடு!

இலவம்பாடி முள்ளு கத்திரிக்காய் என்று அழைக்கப்படும் வேலூர் முள்ளந்தண்டு கத்தரி, ஒரு அரிய, முட்கள் நிறைந்த நாட்டு கத்தரிக்காய் இனமாகும், வேலூர் மாவட்டத்தில் குறிப்பாக அணைக்கட்டு, கணியம்பாடி, குடியாத்தம், கே.வி.குப்பம், வேலூர், காட்பாடி, பேரணாம்பட்டு ஆகிய பகுதிகளில் 200 ஆண்டுகளுக்கு மேலாக இலவம்பாடி முள்ளு கத்திரிக்காய் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

வேலூர் மாவட்டத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் உழவர் சந்தை திட்டத்தை தொடங்கி வைத்து ஆற்றிய உரையில், இலவம்பாடி முள்ளு கத்தரிக்கையை குறிப்பிட்டு அதன் அரிய குணங்களை பற்றி பேசி இருப்பார் என்ற தகவலையும் குறிப்பிட்டு இலவம்பாடி முள்ளு கத்தரிக்காய்க்கு புவிசார் குறியீடு பெறுவதற்காக விண்ணப்பிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வேலூர் முள்ளு கத்தரிக்காய், ராமநாதபுரம் குண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு: முதலிடம் நோக்கி தமிழ்நாடு!

ராமநாதபுரம் குண்டு மிளகாய் என்னும் இந்த வகை மிளகாய் சிறிய உருண்டை வடிவில் காணப்படும், தென்னிந்திய உணவு வகைகளில் பிரபலமான உருண்டை வடிவ மிளகாய் ராமநாதபுரம் புதுக்கோட்டை சிவகங்கை விருதுநகர் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் 200 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.

இந்த ஆண்டு புவிசார் குறியீடு பெறுவதற்காக தேனி பன்னீர் திராட்சை, பண்ருட்டி பலாப்பழம், மார்த்தாண்டம் தேன், கடலூர் முந்திரிப் பருப்பு, கோவை நகமும் பருத்தி சேலை, சேலம் ஜவ்வரிசி, மதுரை சோழவந்தான் வெற்றிலை, திருச்செந்தூர் ஆத்தூர் வெற்றிலை, மயிலாடுதுறை கொள்ளிடம் தைக்கால் ஊஞ்சல், கன்னியாகுமரி மயிலாடி கற்சிற்பம் உள்ளிட்டவற்றிற்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இப்பொருள்களுக்கு புவிசார் குறியீடு கிடைக்குமாயின் இந்திய அளவில் அதிகப்படியான புவிசார் பொருட்கள் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு இடம்பெறும். இது அப்பகுதி விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

banner

Related Stories

Related Stories