தமிழ்நாடு

750 மாணவர்கள் தயாரித்த AzaadiSAT-2 செயற்கைகோளுடன் விண்ணில் பாய்ந்த SSLV-D2 ராக்கெட் : சிறப்புகள் என்ன?

இஸ்ரோவின் SSLV-D2 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

750 மாணவர்கள் தயாரித்த AzaadiSAT-2 செயற்கைகோளுடன் விண்ணில் பாய்ந்த SSLV-D2 ராக்கெட் :  சிறப்புகள் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இஸ்ரோவின் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் இ.ஓ.எஸ்-07, அமெரிக்காவின் ஜானஸ் -01, ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா சார்பில் பள்ளி மாணவர்கள் தயாரித்த ஆதிசாட்-02 ஆகிய மூன்று செயற்கைக்கோள்களை சுமந்து கொண்டு SSLV-D2 ராக்கெட் இன்று விண்ணில் பாய்ந்தது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்துவிண்ணில் செலுத்தப்பட்டது.

750 மாணவர்கள் தயாரித்த AzaadiSAT-2 செயற்கைகோளுடன் விண்ணில் பாய்ந்த SSLV-D2 ராக்கெட் :  சிறப்புகள் என்ன?

SSLV மற்றும் GSLV வகை ராக்கெட் போல் அல்லாமல், 550 கிலோ வரையிலான குறைந்த எடையுள்ள செயற்கைக்கோள்களை சுமந்து SSLV ராக்கெட் வடிவமைக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி, SSLV-D1விண்ணில் ஏவப்பட்டது. இரண்டாவது நிலையிலிருந்து மூன்றாவது நிலை பிரியும்போது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக செயற்கைக்கோள்கள் அதன் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படாமல் தோல்வியை சந்தித்தது. தற்போது அதிலிருந்து மேம்படுத்தப்பட்ட வகையில் SSLV-D2 வகை ராக்கெட் தயாரிக்கப்பட்டது.

அதன்படி, இஸ்ரோவின் 156.3 கிலோ எடை கொண்ட புவி கண்காணிப்பு செயற்கைக் கோளான இ.ஓ.எஸ்.07, கடந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டில் செலுத்தப்பட்டு தோல்வி அடைந்த செயற்கைக்கோள்களுக்கு பதிலாக தற்போது தயாரிக்கப்பட்ட 8.7 கிலோ எடை கொண்ட ஆசாதி சாட்-2 மற்றும் அமெரிக்காவின் அண்டாரிஸ் நிறுவனத்தின் 10.2 கிலோ எடைகொண்ட ஜானஸ்-1 உள்பட 175.2 கிலோ எடை கொண்ட 3 செயற்கைகோள்களை, பயணத்தை தொடங்கிய 15வது நிமிடத்தில் 450 கிலோ மீட்டர் புவிவட்ட சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.

750 மாணவர்கள் தயாரித்த AzaadiSAT-2 செயற்கைகோளுடன் விண்ணில் பாய்ந்த SSLV-D2 ராக்கெட் :  சிறப்புகள் என்ன?

இதில் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனத்தின் சார்பில் அனுப்பப்பட்ட ஆசாதிசாட்-2 என்ற செயற்கைக்கோள் நாடு முழுவதும் 75 பள்ளிகளை சேர்ந்த 750 மாணவிகளால் தயாரிக்கப்பட்டது. இதில் மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சார்பில் 50 கிராம் எடை கொண்ட பேலோட் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories