தற்போது சமூகவலைத்தளம் பெரிய அளவில் பரவியுள்ளது. இதன் மூலம் பரவும் சில செய்திகள் பொய் என்பதும் கண்டறியப்பட்டு வருகிறது. ஆனால், இப்படி பரவும் பொய் செய்திகளில் பெரும்பாலானவை பாஜக மற்றும் அதன் ஆதரவாளர்களால் தான் தற்போது பரப்பப்பட்டு வருகிறது.
கடந்த 2014-ம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்ததில் முக்கிய காரணமாக இருந்தது சமூகவலைத்தளங்கள்தான். அப்போது பாஜக பரப்பிய பொய்ச்செய்திகள் உண்மை என்றே மக்களால் நம்பப்பட்டது. ஆனால் சில ஆண்டுகளுக்கு பின்னர் பாஜக சொன்னது அனைத்தும் பொய் என்பது தற்போது அனைத்து தரப்பினரையும் எட்டியுள்ளது.
அதிலும் தமிழ்நாட்டில் பாஜக சொல்லும் பொய்களை எப்போதுமே மக்கள் நம்பியது இல்லை. ஆனாலும், பாஜக தலைவர்கள் பொய் சொல்வதை ஒருபோதும் நிறுத்தியதில்லை. அந்த வகையில் தற்போது ஒரு சம்பவம் மீண்டும் நடைபெற்றுள்ளது.
தமிழ்நாடு பாஜக தலைவராக இருக்கும் அண்ணாமலை கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள ஓர் தனியார் திருமணம் மண்டபத்தில் நடைபெறும் மாற்றுத்திறனாளிகளுக்கு காது கேட்கும் கருவி, செயற்கை கால் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அண்ணாமலை "காது கேளாதோருக்கு வழங்கப்படும் Cyber Sonic என்ற நிறுவனத்தின் கருவு ஒவ்வொன்றும் 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருக்கும், அதை பாஜக சார்பில் உங்களுக்கு வழங்குகிறோம்" என்று கூறினார். ஆனால் கொடுக்கப்பட்ட அந்த கருவியில் விலை வெறும் ரூ.345 எனவும் அது சீனாவில் தயாரிக்கப்பட்டது என்பதும் தற்போது தெரியவந்துள்ளது.
ரூ.1,999 மதிப்பு கொண்ட அந்தக் கருவியை அமேசான் 83% தள்ளுபடி போக ரூ.345க்கு தற்போது விற்பனை செய்வதாக தன் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தது. இதன்மூலம் பொய் சொல்வதையே மூலதனமாக கொண்ட பாஜக மீண்டும் ஒரு பொய்யை கூறிவிட்டு சென்றுள்ளது தெரியவந்துள்ளது.