தமிழ்நாடு

“தமிழ்நாட்டில் முதல் முறையாக நடமாடும் இடுகாடு வசதி..” : மாநிலம் முழுவதும் கொண்டுவர சிறப்பு திட்டம்!

தமிழகத்தில் முதல் முறையாக கிராமங்களுக்கும் சென்று சேவையளிக்கும் வகையில் நடமாடும் இடுகாடு வசதி தொடங்கப்பட்டு உள்ளது.

“தமிழ்நாட்டில் முதல் முறையாக நடமாடும் இடுகாடு வசதி..” :  மாநிலம் முழுவதும் கொண்டுவர சிறப்பு திட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், ஆட்சி பொறுப்பை ஏற்றதில் இருந்தே பல்வேறு மக்கள் நலன் திட்டங்களை கொண்டுவந்து அவற்றை சிறப்பாக செயல்படுத்தி சாதனைப்படைத்துள்ளார். அந்தவகையில் தமிழ்நாட்டில் நீண்டகாலமாக இருக்கும் சுடுகாடு மற்றும் இடுகாடு பிரச்சனைகளுக்கு தீர்வு காண பல்வேறு நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட துறையின் மூலம் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.

சில கிராமங்களில் நீடிக்கும் சுடுகாடு பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு எட்டமுடியாத சூழல் நிலவுவதால், சடலங்களை எரியூட்ட புதிய முயற்சியில் அரசு இறங்கியுள்ளது. குறிப்பாக, மழை வெள்ளப்பாதிப்பு காலங்களில் ஏரி குளங்களில் நீர் அதிகமாக இருப்பதால், நீரில் மூழ்கி சடலத்தை கொண்டுசெல்லவேண்டிய சூழல் உள்ளது.

“தமிழ்நாட்டில் முதல் முறையாக நடமாடும் இடுகாடு வசதி..” :  மாநிலம் முழுவதும் கொண்டுவர சிறப்பு திட்டம்!

எனவே அவற்றை தவிர்கும் பொருட்டு, தமிழகத்தில் முதல் முறையாக கிராமங்களுக்கும் சென்று சேவையளிக்கும் வகையில் நடமாடும் இடுகாடு வசதி தொடங்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக வெளியான அறிவிப்பில், தமிழகத்தில் முதல் முறையாக கிராமங்களுக்கும் சென்று சேவையளிக்கும் வகையில் நடமாடும் இடுகாடு வசதி தொடங்கப்பட்டுள்ளது.

மாநகராட்சியுடன் இணைந்து ஆத்மா அறக்கட்டளை அமைப்பு இந்தத் திட்டத்தைத் துவங்கியுள்ளது. 25 லட்சம் செலவில் உருவாகியுள்ள இந்த நடமாடும் தகன இயந்திரம் ஒரு மணி நேரத்தில் உடலை எரியூட்டி விடும். இதற்குக் கட்டணமாக ரூ.7,500 வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் சாதக பாதகங்களை ஆராய்ந்த பின்னர் மாநிலம் முழுவதும் ரோட்டரி சங்கங்களின் மூலம் அனைத்து கிராமங்களுக்கும் இதனை விரிவு செய்ய உள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories