தமிழ்நாடு

“‘பீச் ஒலிம்பிக்ஸ்’ போட்டி நடத்துவதற்கான முயற்சி எடுத்துள்ளோம்” : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி!

‘பீச் ஒலிம்பிக்ஸ்’ போட்டி நடத்துவதற்கான முயற்சி எடுத்துள்ளோம். ஏடிபி டென்னிஸ் போட்டியும் கொண்டு வருவதற்கான முயற்சியும் எடுத்து வருகிறோம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“‘பீச் ஒலிம்பிக்ஸ்’ போட்டி நடத்துவதற்கான முயற்சி எடுத்துள்ளோம்” : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தேசிய அளவிலான ஏகலைவா உண்டு உறைவிடப் பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் ஆந்திர மாநிலத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்க தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுடன் தயாராகி உள்ளனர். அவர்களிடன் அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து, விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு தேவையான உபகரணங்களை வழங்கி அவர்களை ஊக்கப்படுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “மூத்த அமைச்சர்களின் வழிகாட்டுதலின் பேரில் எனது பணிகளை என்னால் முடிந்த அளவுக்கு சிறப்பாக செய்ய முயற்சி முடிப்பேன்.தேர்தல் அறிக்கையில் 234 தொகுதியிலும் மினி ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தோம்.

அவற்றை நிறைவேற்றுவதே எனது முதல் இலக்கு. அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறேன். விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில் எனது பணிகள் இருக்கும். ‘முதலமைச்சர் தங்கப் கோப்பை’ என்ற திட்டத்தை முதல்வர் அறிவித்துள்ளார். அதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில், சிலம்பாட்டம், கபடி உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகளை சேர்த்து முதலமைச்சர் தங்கப் கோப்பைக்கான போட்டிகள் ஜனவரி மாதம் முதல் தொடங்குகிறது.

‘பீச் ஒலிம்பிக்ஸ்’ போட்டி நடத்துவதற்கான முயற்சி எடுத்துள்ளோம். ஏடிபி டென்னிஸ் போட்டியும் கொண்டு வருவதற்கான முயற்சியும் எடுத்து வருகிறோம். மாற்றுதிறனாளி விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்குவது குறித்து முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்று அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

விளையாட்டு சங்கங்களும், விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பணிகளைத் தான் செய்து வருகிறார்கள். அவர்களுடன் நாங்களும் ஒருங்கிணைந்து விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் பணிகளில் ஈடுபடுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories