தமிழின் இலக்கியச் செழுமையை உலகறிய செய்யும் வகையில் பொருனை இலக்கியத் திருவிழா தமிழக அரசு சார்பில் இரண்டு நாட்கள் நெல்லை மாநகரில் நடைபெறுகிறது. இந்த திருவிழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து உரையாற்றினார்.
அப்போது, இந்திய துணைகண்டத்தின் வரலாறு தமிழ் மண்ணில் இருந்து எழுதப்படட்டும்.தமிழ் மொழியின் இலக்கிய செழுமையை அடுத்த தலைமுறைக்கு எடுத்து சென்று அறிவு சார் சமூகத்தை வார்த்தெடுக்கும் இலக்குடன் இலக்கிய திருவிழாக்கள் நடத்தபடுவதாக முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.
பின்னர் இதனைத் தொடர்ந்து விழாவில் பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன், “நெல்லை என்றால் தியாக வரலாறு உள்ள பூமி. இந்த மண்ணில் பொருநை இலக்கிய திருவிழா தொடங்கப்பட்டுள்ளது பெருமைக்குரியதாகும். 50 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் இது போன்ற விழாவை யாரும் நடத்தியதில்லை. இதற்காக பள்ளிக் கல்வித்துறையை பாராட்டுகிறேன்.
தமிழகத்தில் அதிக துறை இருக்கும் போது பள்ளிக்கல்வி துறைக்கு தமிழக முதல்வர் அதிக முக்கியத்துவம் அளிக்கிறார். அதிக நிதி ஒதுக்கப்படுகிறது என்றால் இந்த விழாவை சான்றாக கொள்ளலாம். கல்வியை கற்றுகொடுக்கும் சிறந்த இடமாக தமிழகம் விளங்குகிறது.
திராவிட மாடல் என்பது சித்தாந்தம். அதனை தமிழக முதல்வர் கையிழுடுத்துள்ளார். தமிழகத்தில் இல்லம் தேடி கல்வி, மக்களைத் தேடி மருத்துவம் என மக்கள் நலம் சார்ந்த திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்படுகிறது. இந்திய அளவில் 14- வது இடத்தில் இருந்த தமிழக தொழில்துறை, தற்போது 3 - வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.
நம்பர் 1 என்ற நிலைக்கு தமிழகத்தை உயர்த்த முதல்வர் உழைத்துக் கொண்டு இருக்கிறார். தமிழ் மொழிக்கு சிறப்பு சேர்க்கின்ற ஆட்சி நடக்கிறது. வரலாற்றை உருவாக்கு தலைவர்கள் தான் நிலைத்து இருப்பார்கள் அத்தகைய வரலாற்றில் உருவாக்கியவர் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” என தெரிவித்தார்.