தமிழ்நாட்டின் மேதகு ஆளுநர் ரவி, தனது பதவிக்குரிய பொறுப்புணர்ந்து செயல்படுவதில் பல நேரங்களில் தடம் புரளுகின்றார்! அவர் தேவையற்ற விவகாரங்களில் அடிக்கடித் தலை யிட்டு, தனது ஆற்றலையும் அறிவையும் காட்டு வதாக எண்ணி தாறுமாறாகப் பேசி, தமிழ் மக்களின் உணர்வோடு விளையாடத் தொடங் கியுள்ளார். எல்லை தாண்டி மூக்கை நுழைத்து நோட்டம் பார்க்கிறார்.
‘ஆளுநர் அவர்களே! தமிழ்நாடு நீங்கள் ஆளுநராக இருந்த மற்ற மாநிலங்களைப் போன்றதல்ல; இது அரசியல் தெளிவுமிக்க மண்!' இத னைப் பலமுறை கூறிவிட்டோம்: ஆளுநர் ரவிக்கு இதில் சந்தேகம் இருந்தால், மாறுவேடத்தில் ஒரு ஆட்டோவில் ஏறி பயணம் செய்து பார்க்கலாம் அந்த ஆட்டோ ஓட்டுநரிடம். வாயைக் கொடுத்துப் பார்க்கட்டும். அவர். ஆளுநருக்கு தெளிவான அரசியல் பாடம் நடத்திடும் அளவு அறிவாற்றல் பெற்றவர்!
முதல் நாள், “கே.கே.ஷா" என்றால், “கலைஞர் கருணாநிதி ஷா" என்று பேசிவிட்டு மறுநாளே ஒன்றிய அரசின் அழுத்தத்திற்குப் பயந்து 'பல்டி அடித்த ஆளுநர் ஷா பற்றியும், “அழுத்தங்கள் ஆயிரம் வந்தாலும் உண்மைக்கு மாறாக கருத்தறிவிக்க ஒப்பேன்” என்று நிமிர்ந்து நின்ற ஆளுநர் பஞ்சாப் சிங்கம் பர்னாலா குறித்தும், ஜெயலலிதா ஆட்சியின் போது அவராலும் அவரது கட்சியினராலும் பல வகையிலும் அசிங்கப்படுத்தப்பட்டு வெந்து நொந்த ஆளுநர்சென்னாரெட்டிபற்றியும், மாநில உரிமைகளில் தலையிட்ட ஆளுநர் பன்வாரி லால், தி.மு.க. உள்ளிட்ட தமிழக எதிர்க்கட்சி களால் சந்தித்த கருப்புக் கொடி ஆர்ப்பாட்டங்கள் குறித்தும் விளக்கங்கள் தந்து - ஆளுநர் ரவிக்கு தமிழகத்தின் அரசியல் தட்ப - வெட்ப சூழ்நிலை களை விளக்கிடும் ஆற்றல் பெற்றிருப்பதை அறியலாம்!
நாம் ஆளுநர் ரவிக்கு தமிழகத்தின் வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டிக் காண்பிப் பதைக் கண்டு, மிரட்டுவதாக அவர் கருதிவிடக் கூடாது!
தமிழக வரலாற்றின் பழைய பக்கங்கள் சில வற்றைச் சுட்டிக்காட்டியுள்ளோம்!
'திராவிட மாடல்' என்றதுமே சில ஆரியக் குஞ்சுகள் அலறித் துடிப்பது போல, தமிழக ஆளு நரும் அதுகண்டு மிரளுகிறார் என்ற தகவல் - சமூக ஊடகங்களில் இப்போது கசிகிறது.
சமீபத்தில் தமிழக முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களைச் சந்தித்த, பல்வேறு நாடுகளுக்கான இந்தியத் தூதர்கள். பின்னர் மரியாதை நிமித்தமாக ஆளுநர் ரவியைச் சந்தித்துள்ளனர் சந்தித்தவர்கள். தமிழ்நாடு, நாட்டிலேயே ஒரு முன்னேறிய மாநிலமாக உள்ளதைக் குறிப்பிட்டு. ஆளுநர் என்ற முறையில் ரவியிடம் தங்களது மகிழ்ச்சியைத் தெரிவித் துள்ளனர். ஆளுநருக்கு “திராவிட மாடல்' என்ற சொல் வேப்பங்காயாகக் கசந்துள்ளது. திராவிட மாடலைக் குறித்து அவர்களிடம் விமர்சித் துள்ளார்.
அவர் ஆளுநராக இருக்கும் மாநிலத்தில் சிறப் பான ஆட்சி நடைபெறுகிறது என்று கூறியபோது மகிழாமல். திராவிடத்தின் மீது அவர் எரிச்சலைக் கொட்டியது கண்டு திகைத்து, அங்கு சென்றிருந் தவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் செய்திகள் இணையகொண்டதாகவும் தளங்களில் கசிகின்றன.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய பேராசிரியர் அருணன் திராவிட மாடலைக் கேலி செய்த ஒருவருக்கு அளித்த பதிலையே நாம் நமது ஆளுநருக்குக் கூறிட விரும்புகிறோம். விமர்சிக்கிறீர்களே,
'திராவிட இன்னொரு மாடல் இருக்கு; ஆரிய மாடல். அது பற்றி உங்களுடைய பார்வை என்ன?' என்று கேட்டதும், திராவிடமாடல் குறித்து விமர்சித்தவர் திக்கித்துப்போனார், என்று அவர் கூறினார்.
திரு.அருணன் அவர்கள் அப்படிக் கேட்டது மட்டுமின்றி விளக்கமும் அளித்துள்ளார்! திராவிட மாடல் - ஆரிய மாடலுக்கான விளக் கத்தை கழகத் தலைவர் தளபதி ஸ்டாலின் கூறியதை எடுத்துக்காட்டியுள்ளார்.
"திராவிடமாடல் என்றால் சமத்துவம்; ஆரிய மாடல் என்றால் ஏற்றத் தாழ்வு” அருணன் எடுத்துக்காட்டி விளக்கிய தளபதி ஸ்டாலின் கூற்றை, ஆளுநருக்கு யாராவது விளக்கிக் கூறினால்தான் புரியும்.
ஆளும் ஆட்சிக்கு எதிராகப் பிரச்சாரம் செய்ய, மாநில அரசு ஆளுநர்களுக்கு ஊதியம். மாளிகை, பாதுகாப்பு. எடுபிடிகள். ஏவலாளிகளைத் தர வில்லை !
அரசியல் சட்டம் ஆளுநருக்கு அளித்துள்ள பணிகளை விடுத்து மற்ற எல்லா வேலை களிலும் சில ஆளுநர்கள் ஈடுபடத் தொடங் கியுள்ளனர்!
குறள் குறித்து ஆளுநர் ரவி கூறிய கருத்து தமிழகத்தின் தமிழ்ப் பெருங்குடிமக்கள். ஆன் றோர், சான்றோர் எல்லாரையும், அவருக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்த வைத்துள்ளது.
ஆளுநர் ரவிக்கு எதிராக தமிழகத்தில் பல திக்குகளிலும் உருவாகிவரும் எதிர்ப்புகள் சிறு பொறிகளாக இன்று தெரியக்கூடும்.
சிறுபொறிகள்தான் பல நேரங்களில் பெருந் தீயாக மாறிவிடுகிறது. இன்று அதுபோன்று, ஆளுநர் ரவிக்கு எதிராக தமிழகத்தில் உருவா கியுள்ள சிறு பொறிகள், நாளை பெருந்தீயாக மாறாது என்பதற்கு, யாரும் எந்த உத்தரவாத மும் தர இயலாது! இதனை ஆளுநர் ரவி உணர வேண்டும்.
இது எச்சரிக்கையல்ல; நிலைமை விளக்கமே!
- சிலந்தி