தமிழ்நாடு

தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு வெளுத்துக்கட்டப்போகும் மழை .. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை என்ன?

தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு வெளுத்துக்கட்டப்போகும் மழை ..  இந்திய வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆந்திர கடலோரப் பகுதியில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழ்நாட்டில் நேற்று முன்தினம் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் நேற்று சென்னையில் காலையில் இருந்தே மிதமான மழை பெய்து கொண்டே இருந்தது.

இதையடுத்து இன்றும் சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல இடங்களில் காலையில் இருந்தே கனமழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு அக்டோபர் 9ம் தேதி வரை கனமழை பெய்யக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு வெளுத்துக்கட்டப்போகும் மழை ..  இந்திய வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை என்ன?

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "இந்தியாவில் தென்மேற்கு பருவமழை வெளியேறி வரும் நிலையில், பருவமழையைத் தீவிரப்படுத்தும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்தது. இது மெல்ல வலுவிழந்து ஆந்திர கடலோர பகுதியை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியாக நேற்று முதல் நிலவி வருகிறது.

தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு வெளுத்துக்கட்டப்போகும் மழை ..  இந்திய வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை என்ன?

இதன் காரணமாக தமிழ்நாட்டில் பரவலாக வரும் 9 ஆம் தேதி வரை அடுத்த 4 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை நீடிக்கும். இன்றைய தினம் இதன் காரணமாக தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடிய வாய்ப்பு உள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories