மேற்குவங்க மாநிலத்தில் தசரா விழா விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த விழாவின் இறுதி நாளில் துர்கா சிலையைப் பொதுமக்கள் ஆற்றில் கரைப்பார்கள்.
இந்த வகையில் ஜல்பைக்குரி மாவட்டத்தின் மல்பஜாரில் ஓடும் மால் ஆற்றில் பொதுமக்கள் பலர் துர்கா சிலையைக் கரைத்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் 40க்கும் மேற்பட்டோர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர்.
இதில் 8 பேரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மேலும் மாநில பேரிடர் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழு மீட்புப் பணியில் ஈடுபட்டு தீவிரம் காட்டி வருகின்றனர். இதையடுத்து விபத்திற்கு மேற்கு வங்க மாநில முதல்வர், பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.