தமிழ்நாடு

பாம்பு பிடி வீரரின் உடலை சுற்றிக்கொண்ட மலைப்பாம்பு.. இறுதியில் நடந்த சோகம்.. கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி !

மலைப்பாம்பால் பாம்பு பிடிக்கும் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாம்பு பிடி வீரரின் உடலை சுற்றிக்கொண்ட மலைப்பாம்பு.. இறுதியில் நடந்த சோகம்.. கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே மேல்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த சின்னசாமி என்பவர் விவசாய நிலத்தில் விவசாயம் செய்து வந்துள்ளார். இந்த நிலையில், இவர்கள் ஊரில் புகுந்த 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று ஆட்டுக்குட்டியை விழுங்கி பின்னர் சின்னசாமியின் விவசாய நிலையில் பதுங்கிக்கொண்டது.

தனது விவசாய நிலத்தில் மலைப்பாம்பு இருப்பதை கண்ட விவசாயி இது குறித்து பனகமுட்லு கிராமத்தைச் சேர்ந்த பாம்பு பிடிப்பவர் நடராஜன் (வயது 50) என்பவருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன் படி நடராஜன் அங்கு வந்து பார்த்தபோது கிணற்றுக்கு அருகில் மலைப்பாம்பு சுருண்டு கிடந்துள்ளது.

பாம்பு பிடி வீரரின் உடலை சுற்றிக்கொண்ட மலைப்பாம்பு.. இறுதியில் நடந்த சோகம்.. கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி !

பின்னர் அதை அஜாக்கிரதையாக கைகளில் அவர் பிடிக்க முயன்றபோது அவர் உடலை மலைப்பாம்பு சுற்றிக்கொண்டது. இதனால் பாம்பிடம் இருந்து விடுபட நடராஜன் தரையில் உருண்டு புரண்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அருகில் இருந்த கிணற்றில் பாம்போடு நடராஜனும் விழுந்துள்ளார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த விவசாயி சின்னசாமி இது குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்துள்ளார். அதன்படி விரைந்து வந்த தீயணைப்பு துறையில் தண்ணீரில் மூழ்கி இறந்த நிலையில் நடராஜனை மீட்டு கயிற்றின் உதவியோடு அவரை மேலே கொண்டு வந்தனர்.

மேலும், கிணற்றின் ஓரத்தில் இருந்த குழியில் பதுங்கி இருந்த மலைப்பாம்பையும் மீட்டனர். மலைப்பாம்பால் பாம்பு பிடிக்கும் ஒருவர் உயிரிழந்தது அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

banner

Related Stories

Related Stories