தமிழ்நாடு

"கடைத் தேங்காய்கள் கார்ப்பரேட் பிள்ளையார்களுக்கு".. வங்கி வாராக் கடன் குறித்து சு.வெங்கடேசன் MP ஆவேசம்!

கடைத் தேங்காய்கள் கார்ப்பரேட் பிள்ளையார்களுக்கு என ஒன்றிய பா.ஜ.க அரசை மக்களை உறுப்பினர் சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார்.

"கடைத் தேங்காய்கள்
கார்ப்பரேட் பிள்ளையார்களுக்கு"..  வங்கி வாராக் கடன் குறித்து சு.வெங்கடேசன் MP ஆவேசம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

விஜய் மல்லையா, லலித் மோடி, நீரவ் மோடி, மெகுல் சோக்‌ஷி உள்ளிட்ட பல தொழிலதிபர்கள் இந்தியாவில் உள்ள வங்கிகளில் பல கோடிக்கு கடன் வாங்கிக் கொண்டு வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர். இந்த பணத்தை மீட்பதில் ஒன்றிய அரசு தொடர்ந்து மெத்தனபோக்குடன் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் மக்களவையில் ஒன்றிய இணையமைச்சர் பகவத் காரத் , பொருளாதார சூழல், துறை சார்ந்த பிரச்சனைகள் , சர்வதேச வர்த்தக இடர்ப்பாடுகள் காரணமாக வங்கிகளில் வாராக் கடன் அதிகரித்துள்ளது என்றும் கடந்த 8 ஆண்டுகளில் 8.60 லட்சம் கோடி வாராக் கடன் வசூலிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, ஸ்டேட் வங்கியில் 8 ஆண்டுகளில் 1.45 லட்சம் கோடி வராக்கடன். உள்ளது . ஆனால் 19000 கோடி மட்டுமே வசூல் செய்யப்பட்டுள்ளது. மீதிப் பணம் ஸ்வாஹா என விமர்சித்துள்ளார். இது குறித்து மக்களை உறுப்பினர் சு.வெங்கடேசன் ட்விட்டர் பதிவில், "ஸ்டேட் வங்கியில் 8ஆண்டுகளில்1.45 லட்சம் கோடி வராக்கடன்.வசூல் ஆனது 19000 கோடி. மீதம் ஸ்வாஹா.

"கடைத் தேங்காய்கள்
கார்ப்பரேட் பிள்ளையார்களுக்கு"..  வங்கி வாராக் கடன் குறித்து சு.வெங்கடேசன் MP ஆவேசம்!

கட்டத்தவறியவர்களின் பெயர்கள் ரகசியமாம்.கல்விக் கடன், குறு நிதி கடன்களை வசூலிக்க கழுத்தில் துண்டைப் போடுவார்கள். கனவான்கள் எனில் கழுத்துக்கு மேல் காண்பிக்க மாட்டார்கள். இப்படியாக மக்கள் சேமிப்புகள் சூறை. கடைத் தேங்காய்கள் கார்ப்பரேட் பிள்ளையார்களுக்கு" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories