தமிழ்நாடு

மனவளர்ச்சி பாதிக்கப்பட்ட பெண் பாலியல் வன்கொடுமை.. இளைஞருக்கு அதிரடி தீர்ப்பு வழங்கிய கோர்ட்!

மனவளர்ச்சி குறைபாடுள்ள இளம்பெண் ஒருவரை, 42 வயதுடைய நபர் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் நீதிமன்றம் தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது.

மனவளர்ச்சி பாதிக்கப்பட்ட பெண் பாலியல் வன்கொடுமை.. இளைஞருக்கு அதிரடி தீர்ப்பு வழங்கிய கோர்ட்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சென்னை, மயிலாப்பூர் அருகே 27 வயதுடைய மனவளர்ச்சி குறைபாடுள்ள இளம்பெண் ஒருவர் வசித்துவருகிறார். கடந்த 2016 ஆம் ஆண்டு இவரை அதே பகுதியை சேர்ந்த முத்து (42) என்பவர் அத்துமீறி பாலியல் வன்கொடுமை செய்ததாக மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அவரது உறவினர் புகாரளித்தார்.

புகாரின் அடிப்படையில் முத்துவை கைது செய்த காவல்துறையினர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை அல்லிக்குளம் மகிளா நீதிமன்றத்தில் நடந்துவந்தது. மேலும் தீவிர விசாரணை செய்த காவல்துறையினர் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்ததோடு, சரியான சாட்சிகளையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

மனவளர்ச்சி பாதிக்கப்பட்ட பெண் பாலியல் வன்கொடுமை.. இளைஞருக்கு அதிரடி தீர்ப்பு வழங்கிய கோர்ட்!

இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி மன வளர்ச்சி குன்றிய பெண்ணை, பாலியல் வன்கொடுமை செய்ததாக முத்து மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 10 ஆண்டுகள் சிறையும், ரூ.25,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. மனவளர்ச்சி பாதிக்கப்பட்ட பெண்ணை, பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்பை, அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories