தமிழ்நாடு

“நானும் கிரிக்கெட்டில் ஆர்வம் உள்ளவன்தான்..” : மலரும் நினைவுகளை மேடையில் பகிர்ந்த முதலமைச்சர் !

“நானும் கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளில் ஆர்வம் உள்ளவன்தான். பள்ளிக் காலம் முதல் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கக்கூடியவன்” எனத் தெரிவித்துள்ளார்.

“நானும் கிரிக்கெட்டில் ஆர்வம் உள்ளவன்தான்..” : மலரும் நினைவுகளை மேடையில் பகிர்ந்த முதலமைச்சர் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (28.06.2022) ‘தி ஹிந்து’ குழுமத்தின் சார்பில் நடைபெறும் ஸ்போர்ட்ஸ் ஸ்டார் தென்னக விளையாட்டு மாநாட்டில் (Sportstar – South Sports Conclave) கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில் “தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதற்குப் பிறகு, திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சி அமைந்ததற்குப் பிறகு, அனைத்துத் துறைகளிலும் பல்வேறு முன்னெடுப்புகளைச் செய்து வருகிறது என்பது எல்லோருக்கும் நன்றாகத் தெரியும். அதிலும் குறிப்பாக ஒரு திராவிட மாடல் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறோம் என்பதும் உங்களுக்கு நன்றாகப் புரியும்.

அதாவது, அனைவருக்குமான வளர்ச்சி - அனைத்துத் துறையினுடைய வளர்ச்சி - அனைத்து மாவட்டத்தினுடைய வளர்ச்சி, அதையும் தாண்டி, அனைத்து சமூக வளர்ச்சி என்ற அடித்தளத்தில் நம்முடைய ‘திராவிட மாடல்’ ஆட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.

“நானும் கிரிக்கெட்டில் ஆர்வம் உள்ளவன்தான்..” : மலரும் நினைவுகளை மேடையில் பகிர்ந்த முதலமைச்சர் !

வளர்ச்சி என்பதைத் தொழில் வளர்ச்சியாக மட்டும் சிலர் எடுத்துக் கொள்கிறார்கள். ‘டெவலப்மெண்ட்’ என்பதைத் தாண்டிய விரிவான பொருள், ‘வளர்ச்சி’ என்ற சொல்லுக்கு உண்டு. அந்த வகையில் தமிழ்நாடு அனைத்து வகையிலும், அனைத்துத் துறைகளிலும் மேம்பட்டு விளங்க முயற்சித்துக் கொண்டு இருக்கிறோம்.

அதில் ஒரு முக்கியமான துறை தான், விளையாட்டுத் துறை. அத்தகைய விளையாட்டுத் துறையிலும் முன்னோக்கிய பாய்ச்சலில் தமிழ்நாடு இன்றைக்கு சென்று கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் ஒப்புக் கொண்டாக வேண்டும்.

குறிப்பாக, வருகின்ற ஜூலை 28 அன்று 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் நடப்பது நமக்குக் கிடைத்திருக்கக்கூடிய ஒரு மிகப்பெரிய பெருமை என்பதை நாம் உணர்ந்திருக்கிறோம். 200 நாடுகள் - ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ள செஸ் ஒலிம்பியாட் திருவிழா, முதல்முறையாக நம்முடைய சென்னை மாநகரில் நடைபெற இருக்கிறது.

“நானும் கிரிக்கெட்டில் ஆர்வம் உள்ளவன்தான்..” : மலரும் நினைவுகளை மேடையில் பகிர்ந்த முதலமைச்சர் !

2022-ஆம் ஆண்டிற்கான போட்டியை, உக்ரைன் போர் காரணமாக, ரஷ்யாவில் நடத்தும் முடிவை கைவிடுவதாக சர்வதேச செஸ் கூட்டமைப்பு அறிவித்தது. எனவே இந்தப் போட்டியைத் தங்கள் நாடுகளில் நடத்துவதற்கு பல நாடுகள் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டன.

அகில இந்திய செஸ் கூட்டமைப்பு, இந்தியாவில் செஸ் ஒலிம்பியாட்டை நடத்த நாமும் முயற்சிகளை மேற்கொண்டோம். அப்போது நமது அரசு உரிய நேரத்தில், உரிய நடவடிக்கை எடுத்த காரணத்தால் அந்த வாய்ப்பு சென்னைக்குக் கிடைத்திருக்கிறது.

இந்தியாவில் நடப்பது இது முதல் முறை என்பதையும், அதையும் தாண்டி பெருமையாக சொல்ல வேண்டுமென்றால், அந்த முதல் முறையும் நம்முடைய தமிழ்நாட்டில் நடப்பதுதான் நமக்குக் கிடைத்திருக்கக்கூடிய மகிழ்ச்சி.

“நானும் கிரிக்கெட்டில் ஆர்வம் உள்ளவன்தான்..” : மலரும் நினைவுகளை மேடையில் பகிர்ந்த முதலமைச்சர் !

விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் என 2,500 பேர் உலகம் முழுவதிலும் இருந்து அந்தப் போட்டிக்கு, நிகழ்ச்சிக்கு வர இருக்கிறார்கள். இதனால் சர்வதேச அளவில் தமிழகம் அனைவராலும் உற்றுநோக்கக்கூடிய ஒரு மாநிலமாக மாறப் போகிறது.

செஸ் ஒலிம்பியாட் விளையாட்டுப் போட்டியை நடத்துவதன் மூலமாக நம்முடைய தமிழக அரசு பெருமையடைகிறது. இந்த சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை நடத்துவதற்காக மாநில அரசு 92 கோடியே 13 லட்சம் ரூபாய் நிதியை ஒதுக்கியிருக்கிறது.

44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான இலச்சினை (Logo) மற்றும் சின்னத்தை சில வாரங்களுக்கு முன்னால் நான் வெளியிட்டேன். சதுரங்க விளையாட்டில் இருக்கக்கூடிய ‘நைட்’ போலவே ஒரு குதிரை வடிவமைக்கப்பட்டு, அது வணக்கம் சொல்லும் வகையில் காணப்பட்டது. தமிழ் முறைப்படி அது வேட்டி - சட்டை அணிந்துகொண்டு, அதற்கு 'தம்பி' என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.

“நானும் கிரிக்கெட்டில் ஆர்வம் உள்ளவன்தான்..” : மலரும் நினைவுகளை மேடையில் பகிர்ந்த முதலமைச்சர் !

இத்தகைய ‘கவுண்ட் டவுன்’ தொடங்கப்பட்டுள்ள நேரத்தில் இந்த கான்க்ளேவ் நடப்பது மிகமிகப் பொருத்தமாக அமைந்திருக்கிறது. சரியான நேரத்தை தேர்வு செய்த ‘தி இந்து’ குழுமத்தை நான் உள்ளபடியே பாராட்டுகிறேன், அதற்காக என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

நானும் கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளில் ஆர்வம் உள்ளவன்தான். கிரிக்கெட் போட்டிகளை பார்ப்பதை நான் தவற விடமாட்டேன். பள்ளிக் காலம் முதல் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கக்கூடியவன். மேயர் ஆனபோதும் கிரிக்கெட் போட்டியில் கலந்துகொண்டு நான் விளையாடி இருக்கிறேன்.

எத்தகைய பணிச்சூழல்கள் இருந்தாலும் மறைந்த நம்முடைய தமிழக முதல்வராக இருந்த தலைவர் கலைஞர் அவர்களும் கிரிக்கெட் போட்டிகளைத் தவறாமல் பார்த்துவிடுவார்கள்.

விளையாட்டுப் போட்டிகள் என்பது, விளையாடுபவர்களை மட்டுமல்ல, போட்டிகளை பார்ப்பவர்களையும் உற்சாகம் ஊட்டக்கூடிய வகையில் அது அமைந்திருக்கிறது. அதேபோல் விளையாடுபவர்களை ‘விளையாட்டு வீரர்கள்’ என்று சொல்கிறோம்.

“நானும் கிரிக்கெட்டில் ஆர்வம் உள்ளவன்தான்..” : மலரும் நினைவுகளை மேடையில் பகிர்ந்த முதலமைச்சர் !

அத்தகைய கம்பீரமான துறைதான் இந்த விளையாட்டுத் துறை. இத்தகைய விளையாட்டுத் துறையில் ஏராளமான முன்னெடுப்புகளை தமிழ்நாடு அரசு செய்து வருகிறது. நம்முடைய கழக ஆட்சி அமைந்தவுடனே ஒரு அறிவிப்பைச் செய்தோம். அதாவது

ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வெல்லக்கூடிய வீரர்களுக்கு 3 கோடி ரூபாய், வெள்ளிப்பதக்கம் வெல்லக்கூடிய வீரருக்கு 2 கோடி ரூபாய், வெண்கலப்பதக்கம் வெல்லக் கூடிய வீரரூக்கு 1 கோடி ரூபாய் என்று அறிவித்தோம். இது மிகப்பெரிய பரிசுத் தொகை!

விளையாட்டு வீரர்களுக்கு முதலில் தேவையானது ஊக்கம்தான். அத்தகைய ஊக்கத்தை அளிப்பதற்காக இந்த அறிவிப்பை நம்முடைய அரசின் சார்பில் நாம் செய்தோம்.

டோக்கியோ ஒலிம்பிக், பாராலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ளும் வீரர்களுக்கு தலா 5 லட்சம் வீதம் 55 லட்சம் ரூபாய் வழங்கினோம். வாள்சண்டை வீராங்கனை பவானி தேவி அவர்களுக்கு டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்துகொள்ள 5 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கினோம்.

தமிழ்நாடு உடற்கல்வி இயல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் இறகுப்பந்து பயிற்சிக் கூடம், மேசைப்பந்து பயிற்சிக் கூடம், தங்கும் விடுதி, ஆய்வகம் ஆகியவை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பக் கலை வீரர்களுக்கு விளையாட்டு ஒதுக்கீட்டில் 3 விழுக்காடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

“நானும் கிரிக்கெட்டில் ஆர்வம் உள்ளவன்தான்..” : மலரும் நினைவுகளை மேடையில் பகிர்ந்த முதலமைச்சர் !

காட்பாடியில் திறந்தவெளி மாவட்ட விளையாட்டு வளாகமும் - சென்னையில் பெண்களுக்கான புதிய விளையாட்டு விடுதியும் - கிருஷ்ணகிரி, ஓசூரில் விளையாட்டு அரங்குகளில் புதிய அரங்குகளும் அமைக்கப்பட இருக்கிறது. டோக்கியோ ஒலிம்பிக்கில் நடந்த தடகளப் பிரிவில் கலந்துகொண்ட தனலட்சுமி, சுபா ஆகிய இருவருக்கும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திலும் - பாராஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகிதங்கள் நிறுவனத்திலும் பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.

விளையாட்டு வீரர்களுக்கு ஏராளமாக - தாராளமாக நிதி உதவிகளை இந்த அரசு செய்து கொண்டிருக்கிறது, செய்யவும் போகிறது. தமிழ்நாட்டில் இப்படிப்பட்ட நிலையை இன்றைக்கு நாம் உருவாக்கியிருக்கிறோம்.

அதுமட்டுமல்ல, ஜப்பான் நாட்டில் நடந்த மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் தடகள விளையாட்டில் வெள்ளிப்பதக்கம் வென்ற மாரியப்பன் அவர்களுக்கு 2 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது. ஸ்காட்லாந்தில் நடந்த ஸ்குவாஷ் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தீபிகா பல்லிக்கல், கார்த்திக், சவுரவ் கோஷல், ஜோஷ்னா சின்னப்பா ஆகியோருக்கு 3 கோடி ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

2015 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளில் அமெரிக்கா, அபுதாபியில் நடந்த சிறப்பு ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு 3 கோடியே 90 லட்சம் ரூபாய் நிதி உதவி தரப்பட்டுள்ளது.

2020-ஆம் ஆண்டுக்கான ‘ஃபிடே’ உலக சதுரங்க ஆன்லைன் குழு வாகையர் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற குழுவினருக்கு 92 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டது.

2021-ஆம் ஆண்டுக்கான ‘ஃபிடே’ உலக சதுரங்க ஆன்லைன் குழு வாகையர் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற குழுவினருக்கு 57 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கப்பட்டிருக்கிறது.

“நானும் கிரிக்கெட்டில் ஆர்வம் உள்ளவன்தான்..” : மலரும் நினைவுகளை மேடையில் பகிர்ந்த முதலமைச்சர் !

இதற்கெல்லாம் மேலாக, மகுடம் வைத்தாற்போல மதுரையில், அலங்காநல்லூரில் நமது பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கென பிரம்மாண்டமான அரங்கம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. வரும் ஆண்டில் கட்டுமானப் பணிகள் துவங்கப்படவிருக்கிறது என்பதையும் நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். அதேபோல், மாவட்ட அளவில் விளையாட்டுகளை ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் விளையாட்டு அரங்கம் அமைக்கவும் இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் நம்முடைய அரசு வெளியிட்டிருக்கிறது. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இவை அனைத்தும் இந்த ஓராண்டு காலத்தில் செய்யப்பட்டவை.

தமிழக விளையாட்டுத் துறை மிகமிக வேகமாகவும், சுறுசுறுப்பாகவும் செயல்பட்டு வருகிறது என்பதை இதன்மூலம் நாம் அறியலாம். இத்தகைய விளையாட்டு வீரர்களைத் தேடியும், உருவாக்கியும் வருகிறது நம்முடைய அரசு. இத்தகைய செயல்பாடுகளுக்கு ஊக்கம் அளிப்பதாக இந்த மாநாடு அமைந்திருக்கிறது.

நமது மாநிலத்திலுள்ள அனைத்து விளையாட்டு வீரர்களையும் ஊக்கப்படுத்தவும், அனைத்து விளையாட்டுக்களையும் மேம்படுத்தவும் இங்கேயே சர்வதேச விளையாட்டு வீரர்களை உருவாக்கவும் இந்த மாநாடு அடித்தளம் அமைக்கும் என்று நான் மனதார நம்புகிறேன்.

“நானும் கிரிக்கெட்டில் ஆர்வம் உள்ளவன்தான்..” : மலரும் நினைவுகளை மேடையில் பகிர்ந்த முதலமைச்சர் !

விளையாட்டுத் துறையில் தமிழக அரசு எடுக்க வேண்டிய முன் முயற்சிகள் குறித்தும், பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் விளையாட்டை ஊக்கப்படுத்த என்னென்ன செய்யலாம் என்பது குறித்தும், விளையாட்டை உடல்சார் கல்வியாக அனைவரும் நினைக்க என்ன மாதிரியான வடிவங்களில் இதனை அறிமுகம் செய்யலாம் என்பது குறித்தும், மெகா விளையாட்டு போட்டிகளை எந்த வகையில் நடத்தலாம் என்பது குறித்தும் அரசுக்கு இந்த மாநாடு அரிய ஆலோசனைகளைச் சொல்ல வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

விளையாட்டுத் துறையைப் பொறுத்தவரையில் எத்தனையோ கனவுகள் நமது அரசிற்கு இருக்கிறது. அவற்றை நனவாக்கும் வகையில் விளையாட்டுத் துறை இன்னும் சிறக்க வழிவகைகளை நாம் காணவேண்டும். அதற்கு இந்த கான்கிளேவ் நல்ல துவக்கமாக அமையும் என்று நான் கேட்டு, இந்த நிகழ்ச்சியிலே கலந்து கொண்டமைக்காக மீண்டும் ஒருமுறை என்னுடைய நன்றியைத் தெரிவித்து என் உரையை நிறைவு செய்கிறேன்

banner

Related Stories

Related Stories