திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சல்மான். இளைஞரான இவர் சென்னையில் உள்ள சட்டக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். விடுதியில் தங்கிப் படித்து வந்த சல்மான் சில நாட்களுக்கு முன்பு ஊருக்குச் சென்றுள்ளார்.
பின்னர், ஊரில் இருந்து விடுதிக்கு வந்த அவர் திடீரென தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது பார்த்து அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள் போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து அங்கு வந்த போலிஸார் அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்தனர். பிறகு அவரது அறையைச் சோதனை செய்தபோது தற்கொலைக்கு முன்பு சல்மான் எழுதிய கடிதம் ஒன்றைக் கைப்பற்றியுள்ளனர்.
அதில், மரணத்திற்குப் பிறகு என்ன நடக்கும் என்பதை நான் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன். நான் சேமித்துவைத்துள்ள ரூ.5000 பணத்தைத் தனது தாயாருக்காக வைத்துள்ளேன் என எழுதியிருந்ததாக போலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த தற்கொலை சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடிதம் எழுதி வைத்து சட்டக் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.