தமிழ்நாடு

எஸ்.பி.வேலுமணிக்கு மீண்டும் ஆப்பு.. 110 கோடி டெபாசிட் தொகையை பறிமுதல் செய்யும் உத்தரவு நீட்டிப்பு!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான ஊழல் வழக்கில் அவரது உறவினர்களுக்கு சொந்தமான நிறுவனங்களின் 110 கோடிக்கும் அதிகமான நிரந்தர டெபாசிட் தொகையை பறிமுதல் செய்யலாம் என்ற உத்தரவை நீட்டித்து உத்தரவு.

எஸ்.பி.வேலுமணிக்கு மீண்டும் ஆப்பு.. 110 கோடி டெபாசிட் தொகையை பறிமுதல் செய்யும் உத்தரவு நீட்டிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான ஊழல் வழக்கில் அவரது உறவினர்களுக்கு சொந்தமான நிறுவனங்களின் 110 கோடிக்கும் அதிகமான நிரந்தர டெபாசிட் தொகையை பறிமுதல் செய்யலாம் என்ற உத்தரவை நீட்டித்து ஊழல் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்பட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலிஸார் வழக்குப்பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து எஸ்.பி.வேலுமணி, அவரது நண்பர்கள், உறவினர்கள் உள்பட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலிஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து, எஸ்.பி.வேலுமணியின் நெருங்கிய உறவினர்கள் நடத்தி வந்த கே.சி.பி. இன்ப்ரா நிறுவனம், ஆலம் கோல்டு மற்றும் டைமன்ட் நிறுவனம் ஆகியவற்றின் வங்கி கணக்கில் இருந்த 110 கோடியே 93 லட்சத்துக்கு 20 ஆயிரத்து 174 ரூபாய் நிரந்தர டெபாசிட் தொகையை லஞ்ச ஒழிப்புத்துறை முடக்கம் செய்தது.

இந்தப் பணத்தை பறிமுதல் செய்ய அனுமதி கோரி லஞ்ச ஒழிப்புத்துறை சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

மனுவை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், எஸ்.பி.வேலுமணி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தொடர்புடைய 110 கோடியே 93 லட்சத்துக்கு 20 ஆயிரத்து 174 ரூபாய் வங்கி நிரந்தர டெபாசிட்டை இடைக்காலமாக பறிமுதல் செய்ய அனுமதியளித்து உத்தரவிட்டது.

இந்த வழக்கு சம்பந்தமாக கே.சி.பி. இன்ப்ரா நிறுவனம், ஆலன் கோல்டு அன்ட் டைமன்ட் நிறுவனம் ஆகியவை பதில் அளிக்கவும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதி ஓம்பிரகாஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில், லஞ்ச ஒழிப்புத்துறையின் மனு ஏற்கனவே விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது. எனவே, தற்போதைய நிலையில் மனுவை நிராகரிக்க மனுதாரர்கள் கோர முடியாது. இருந்தபோதிலும் கூடுதல் மனு தாக்கல் செய்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, ஏற்கனவே தாக்கல் செய்த மனுவில் உள்ள குறைபாடுகளை சரி செய்து லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை வருகிற ஏப்ரல் 5ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார். அதேவேளையில், நிறுவனங்களின் டெபாசிட் தொகையை பறிமுதல் செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவு நீட்டிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டார்.

banner

Related Stories

Related Stories