தமிழ்நாடு

Drone கேமரா உதவியுடன் ரவுடியை விரட்டி பிடித்த தமிழ்நாடு போலிஸ்: சினிமாவை மிஞ்சும் சேஸிங் காட்சி (video)

டிரோன் உதவியுடன் புதருக்குள் பதுங்கியிருந்த ரௌடியை போலிஸார் கைது செய்தனர்.

Drone கேமரா உதவியுடன் ரவுடியை விரட்டி பிடித்த தமிழ்நாடு போலிஸ்: சினிமாவை மிஞ்சும் சேஸிங் காட்சி (video)
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தென்காசி பகுதியைச் சேர்ந்தவர் சாகுல் ஹமீது. இவர் மீது கொலை மற்றும் கொள்ளை, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த வழக்குகளில் தலைமறைவாக இருந்த அவரை போலிஸார் தீவிரமாகத் தேடிவந்தனர்.

இந்நிலையில் தென்காசி பகுதியில் அரிவாளைக் காட்டி ரவுடி சாகுல் ஹமீது வழிபறியில் ஈடுபடுவதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனே போலிஸார் அங்கு சென்று ஆய்வு செய்தனர்.

அப்பகுதியில் 50 ஏக்கர் பரப்பளவில் குளங்கள் மற்றும் புதர்கள் சூழ்ந்த பகுதியில் ரவுடி எங்கு பதுங்கியிருக்கிறார் என்று கண்டுபிடிப்பதில் போலிஸாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் அப்பகுதி மக்களிடம் போலிஸார் நடத்திய விசாரணையில் ரவுடி சாகுல் புதர்செடி பகுதியில்தான் பதுங்கியிருந்தது உறுதியானது.

இதனால் அவர் பதுங்கி இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க போலிஸார் டிரோன் கேமராவைப் பயன்படுத்தினர். பின்னர் அப்பகுதியில் டிரோன் கேமராவை பறக்கவிட்டனர். அப்போது புதர்செடிகள் நிறைந்த பகுதியில் சாகுல் பதுங்கியிருந்தது தெரியவந்தது. உடனே போலிஸார் குளத்திற்குள் இறங்கி துப்பாக்கி முனையில் ரவுடி சாகுலை சுற்றிவளைத்து கைது செய்தனர்.

சினிமாவையே மிஞ்சும் அளவிற்கு நடந்த போலிஸாரின் இந்த அதிரடி நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் போலிஸாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories