தமிழ்நாடு

விஜய் மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகி உட்பட 9 பேர் கைது... பின்னணி என்ன?

இளைஞர் ஒருவரை தாக்கிய விஜய் மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகி உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விஜய் மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகி உட்பட 9 பேர் கைது... பின்னணி என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

செல்போன் திருடியதாக கூறி இளைஞர் ஒருவரை தாக்கிய விஜய் மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகி உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை பல்லாவரம், மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பாலாஜி (23). இவர் அதே தெருவில் ஐஸ் கடை நடத்தி வரும் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த செங்கல்பட்டு மாவட்ட தொண்டரணி பொருளாளர் அன்சர் (எ) அணிஷ்(29), கடையில் வேலை பார்த்து வந்தார்.

பாலாஜிக்கு அணிஷ் சம்பள பாக்கி தர வேண்டி இருந்ததால், அதற்காக கடையில் வேலை செய்யும் நபர்களின் செல்போன் மற்றும் 10,500 ரூபாய் ஆகியவற்றை திருடியதாக நினைத்து பாலாஜியை அணிஷ் (29), பாலகுமார்(20), சரத் (29), ராஜேஷ் (29), நிசார் அகமது (24), அபில் ரகுமான் (22), முகேஷ் கண்ணா (19), மாதவன்(19), மனோஜ் குமார் (24), உள்ளிட்ட 9 பேர் சேர்ந்து கட்டையால் சரமாறியாக தாக்கியுள்ளனர்.

இந்த தாக்குதலில் பாலாஜிக்கு தலையில் காயம் ஏற்பட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் பல்லாவரம் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் தயால் உள்ளிட்ட போலிஸார் உடனடியாக விசாரித்து, விஜய் மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகி உட்பட 9 பேரையும் கைது செய்து, வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.

banner

Related Stories

Related Stories