தமிழ்நாடு

இரவில் முதியோர் - பெண்களுக்கு இலவசம்.. பெண் ஆட்டோ ஓட்டுநர் அசத்தல் - குவியும் பாராட்டு!

சென்னையில் இரவு நேரங்களில் முதியவர்கள், பெண்களுக்கு இலவசமாக ஆட்டோ ஓட்டும் பெண் ஆட்டோ ஒட்டுநருக்கு பாராட்டுக்கள் குவிந்துள்ளது.

இரவில் முதியோர் - பெண்களுக்கு இலவசம்.. பெண் ஆட்டோ ஓட்டுநர் அசத்தல் - குவியும் பாராட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னையில் தினசரி 10 லட்சம் பேர் ஆட்டோவில் பயணம் செய்வதாக புள்ளி விவரம் ஒன்று தெரிவிக்கிறது. இதுதவிர அரசுப் பேருந்து, ரயில்கள் என நாள்தோறும் மக்கள் தங்கள் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் லாபத்திற்காக சலுகைகளை முதலில் அளித்து பின்பு கூடுதல் பணம் பறிக்கும் முன்னணி வாகன சேவை நிறுவனங்களுக்கு மத்தியில் சென்னையில் இரவு நேரங்களில் பெண்களுக்கு இலவச பணத்தை அறிவித்துள்ளார் பெண் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர்.

கேரளாவில் இருந்து தனது கணவருடன் சென்னைக்கு குடிபெயர்ந்தவர் ராஜி அசோக். பி.ஏ பட்டதாரியான இவர் 23 ஆண்டுகளாக சென்னையில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்நிலையில் இவரது ஆட்டோவில் இரவு 10 மணிக்கு மேல் முதியோர்களுக்கும், பெண்களுக்கும் இலவச சேவை அளிப்பதாக அறிவித்து பலரின் கவனத்தைப் பெற்றுள்ளார்.

மேலும் இவர் அவசர தேவைக்கு 24 மணிநேரமும் இலவச சேவை செய்து மக்கள் மத்தியில் சமூக சேவகி என்ற பாராட்டையும் பெற்றுள்ளார். தொடர்ந்து பல்வேறு சமூக உதவிகளை ராஜி செய்து வருவதாகவும் பலரும் பாரட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories