சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் பாதுகாப்பு பணிகளில் மத்திய தொழிற்படை போலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் நாக்கூர் பகுதியைச் சேர்ந்த யாஸ்பால் (26) என்ற காவலர் பணியில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்து வந்துள்ளார் யாஸ்பால். அருகில் உள்ள காவலரிடம் சொல்லிவிட்டு, விமான நிலையத்தின் 19வது நுழைவுவாயிலில் உள்ள கழிப்பறைக்குச் சென்றார்.
அப்போது அங்கு திடீரென துப்பாக்கிச் சூடும் சத்தம் கேட்டுள்ளது. அங்கிருந்த பணிகள், காவலர்கள் என அனைவரும் அதிர்ச்சியில் பதறிபோன நிலையில், பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் கழிவறைக்குச் சென்று பார்த்துள்ளனர்.
அங்கு யாஸ்பால் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து போலிஸார் அவரது உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக போலிஸார் வழக்குப் பதிவு விசாரணையில் நடத்தியதில், யாஸ்பால் கடந்த மாதம் விடுமுறைக்காக தனது சொந்த ஊருக்குச் சென்றுள்ளார். அப்போது அவர் ஊரில் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். அவருக்கு திருமண ஏற்பாடு நடந்ததால் மனவேதனையில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்றைய தினம் பணிக்குத் திரும்பியுள்ளார். மனமுடைந்து சோகத்தில் பணிக்கு வந்து துக்கம் தாளாமல், தற்கொலை செய்துகொண்டதாக விசாரணையில் தெரியவந்தது. இந்தச் சம்பவத்தால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.