உலகம்

உக்ரைனுக்கு அமெரிக்கா கொடுத்த பயங்கர ஆயுதம்.. ரஷ்ய படைகளை திணற வைக்கும் ‘FGM 148 ஜாவ்லின்’: பின்னணி என்ன?

ஆரம்பத்தில் எளிதாக, உக்ரைனுக்குள் நுழைந்த ரஷ்ய படைகள் அதன்பின்னர் பலத்த சிக்கலை எதிர்க்கொண்டு வருகிறது.

உக்ரைனுக்கு அமெரிக்கா கொடுத்த பயங்கர ஆயுதம்.. ரஷ்ய படைகளை திணற வைக்கும் ‘FGM 148 ஜாவ்லின்’: பின்னணி என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகின்றன. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்ய படைகள் தாக்கி அழித்துள்ளன.

அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக்கொள்ள, ரஷ்ய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் உள்ளது. இந்நிலையில் ரஷ்ய படைகளுக்கு பதிலடி கொடுக்க அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்களை வழங்கி வருகின்றனர். ஆரம்பத்தில் எளிதாக, உக்ரைனுக்குள் நுழைந்த ரஷ்ய படைகள் அதன்பின்னர் பலத்த சிக்கலை எதிர்கொண்டு வருகின்றன.

அதற்கு அமெரிக்கா உக்ரைனுக்கு கொடுத்த ஆயுதம் ஒன்றே காரணம் எனக் கூறப்படுகிறது. அமெரிக்க ராணுவத்தின் சக்தி வாய்ந்த ஆயுதமான FGM 148 ஜாவ்லின் என்ற ஆயுதன் முக்கிய பங்காற்றி வருகிறது. சிறிய அளவில் ராக்கெட் லாஞ்சர் போல இருக்கும் இந்த ஆயுதத்தை எளிதில் தூக்கிச் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஜாவ்லின் மூலம் மிகத் துல்லியத் தாக்குதலை ரஷ்யா மீது நடத்தி வருகிறது உக்ரைன்.

அதுமட்டுமல்லாது, ஜாவ்லின் டாங்கினை 65 மீட்டர் முதல் 4,000 மீட்டர் வரை குறிவைத்து எறியமுடியும். இதன் நீளம் 1.2 மீட்டராகும். 10 வினாடிகளில் தாக்கி அழிக்கும் வேகம் கொண்டவையாக இந்த ஆயுதம் அமைந்துள்ளது. சுமார் 500க்கும் மேற்பட்ட ஆயுதங்களை வழங்கியதாகக் கூறப்படுகிறது.

banner

Related Stories

Related Stories