தமிழ்நாடு

தமிழ்நாட்டிற்கு ஒவ்வாத கட்சி பா.ஜ.க: ப.சிதம்பரம் கடும் தாக்கு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் தெளிவான முடிவெடுத்து வருவதாக ப.சிதம்பரம் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டிற்கு ஒவ்வாத கட்சி பா.ஜ.க: ப.சிதம்பரம் கடும் தாக்கு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் தெளிவான முடிவுகள் எடுத்து அனைத்துக் கட்சிகளையும் கலந்து ஆலோசித்து செயல்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பாராட்டு தெரிவித்தார்.

சிவகங்கை அருகே நாட்டரசன் கோட்டையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது:-

5 ஆண்டிற்கு ஒரு முறை சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல் நடத்த வேண்டும். அதுபோல் உள்ளாட்சி தேர்தலும்நடத்த வேண்டும் என்பது அரசியல் சாசன விதி. அரசியல் சாசன விதியை திருத்த முடியாதவர்கள் அந்த விதியை முறியடிக்கப் பார்க்கிறார்கள்.

உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுக்கேட்டு வரும் அ.தி.மு.க.வினரிடம் 5 ஆண்டு ஏன் தேர்தலை நடத்தவில்லை என மக்கள் கேட்க வேண்டும். தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. அந்த வாக்குறுதி நிறைவேற் றப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு நடவடிக் கைகளிலும் தெளிவான முடிவு எடுத்து அனைத்துக் கட்சி களையும் கலந்து ஆலோசித்து செயல்படுகிறார். அவரை நான்பாராட்டுகிறேன்.

பா.ஜ. இந்த மண்ணிற்கு ஒவ்வாத கட்சி. தமிழ் மொழி, கலாச்சாரம், மத ஒற்றுமைக்கு எதிரான கட்சி. இவ்வாறு ப.சிதம்பரம் பேசினார்.

banner

Related Stories

Related Stories