தமிழ்நாடு

“இடஒதுக்கீடு முறையாக பின்பற்றவில்லை என்றால் சட்ட விளைவுகளை சந்திக்கவேண்டும்”: தி.மு.க எம்.பி எச்சரிக்கை!

இந்திய முழுவதும் உள்ள சட்டப்பல்கலைக்கழகங்களில் முறையான இடஒதுக்கீடு வழங்கப்படவேண்டும் என்றும் இல்லையென்றால் சட்ட ரீதியான விளைவுகளை சந்திக்க நேரிடும் என திமுக எம்.பி பி.வில்சன் கடிதம் எழுதியுள்ளார்.

“இடஒதுக்கீடு முறையாக பின்பற்றவில்லை என்றால் சட்ட விளைவுகளை சந்திக்கவேண்டும்”: தி.மு.க எம்.பி எச்சரிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இந்திய முழுவதும் உள்ள சட்டப்பல்கலைக்கழகங்களில் எஸ்சி மற்றும் எஸ்டி ஓபிசி மாணவர்கள் உரிய வாய்ப்பை பெற முறையான இடஒதுக்கீடு வழங்கப்படவேண்டும் என்றும் இல்லையென்றால் சட்ட ரீதியான விளைவுகளை சந்திக்க நேரிடும் என தி..முக எம்.பி.,யும் மூத்த வழக்கறிஞருமான பி.வில்சன் அனைத்து மாநில சட்டப்பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். 

தி.மு.க மாநிலங்களவை உறுப்பினரும், மூத்த வழக்கறிஞருமான பி.வில்சன்,.மத்திய அரசின் கல்வித்துறை அமைச்சர்,சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் மேலும் அனைத்து மாநில தலைமைச்செயலளார்கள், சட்டப்பல்லைக்கழக துணைவேந்தர்கள் உள்ளிட்டோருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் அனைத்து சட்ட கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றுவது அரசியலமைப்பு சட்டத்தின் கட்டாயமானது என்று ஏற்கனவே கடிதம் எழுதியதை சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த கடிதத்தின்படி, லக்னோ மற்றும் கொச்சியில் உள்ள தேசிய சட்டப்பள்ளிகளில் மாநில இடதுக்கீடு முறையை சரியாக பின்பற்றுவதாக தெரிவித்துள்ளதாகவும் ஆனால் மற்ற மாநிலங்களில் உள்ள சட்ட பல்லைக்கழகங்கள், தேசிய சட்டப்பள்ளிகளில் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., பிரிவினருக்கான அரசியலமப்பு சட்ட இட ஒதுக்கீடோ, மாநில இட ஒதுக்கீடோ பின்பற்றப்படவில்லை என்பது தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தி.மு.க முன்னெடுத்துச்சென்ற சட்டப்போரட்டத்தின் விளைவாக, மருத்துவ பட்டப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓ.பி.சி பிரிவினருக்கான 27 சதவீத இட ஒதுக்கீடு அறிக்கை செல்லும் என உச்சநீதிமன்றம் அண்மையில் வழங்கிய வரலாற்று தீர்ப்பு வழங்கியதை சுட்டிக்காட்டியுள்ள மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், தேசிய சட்டப்பல்கலைக்கழங்களிலும் இட ஒதுக்கீடு தொடர்பாக யாரவது ஒருவர் வழக்கு தொடர்ந்து, இட ஒதுக்கீடு பெறும்வரை காத்திருக்காமல்,சட்டப்படிப்பில் எஸ் சி, எஸ் டி மற்றும் ஓபிசி மாணவர்களுக்கு உரிய வாய்ப்பளிக்க அகில இந்திய ஒதுக்கீடு,மாநில. அரசின் உரிய இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். உரிய இட ஒதுக்கீடு பின்பற்றவில்லை என்றால் சட்ட விளைவுகளை சந்திக்கவேண்டும் என்று எச்சரித்துள்ளார்

banner

Related Stories

Related Stories