முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சைக்கிள் பயணம் செய்வது அதற்கான பிரச்சாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு மிகப்பெரிய ஊக்குவிக்கும் சக்தியாகத் திகழ்கிறது என்று “தி இந்து’’ ஆங்கில நாளேடு தனது சிறப்புச் செய்தியில் புகழாரம் சூட்டியுள்ளது.
இதுகுறித்து நேற்றைய (17.1.2022) “தி இந்து’’ ஆங்கில நாளேட்டில் வெளியிடப்பட்டுள்ள சிறப்புச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:-
“பெருநகர சென்னை மாநகராட்சி கடந்த சில நாட்களாக சைக்கிள் ஓட்டுதல், நடைபயணம் செய்தல் மற்றும் ஓட்டம் போன்றவற்றை ஊக்குவிக்கத் தொடங்கியுள்ளது. இது “சிங்காரச் சென்னை 2.0’’ திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் “நலமிகு சென்னை’’ பிரச்சாரத்தின் ஓர் அம்சமாகும். இதற்கு முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சமீபத்தில் சைக்கிள் பயணம் ஒன்றை மேற்கொண்டு அதற்கு ஊக்குவிப்பை அளித்ததோடு, அதன் மூலம் சைக்கிள் ஓட்டுவதில் தனக்குள்ள ஆர்வத்தையும் வெளிப்படுத்தினார்.
அதன்மூலம் பெரும் நகரங்களில் சைக்கிள் ஓட்டுதல், நடைபயணம் செய்தல், ஓட்டம் போன்றவற்றுக்கான போட்டிகளை நடத்தும் ஒன்றிய அரசின் முயற்சிகளையும் தொடங்கி வைத்தார். ஏராளமான சைக்கிள் ஓட்டுவோர் சங்கங்களும், குடியிருப்போர் சங்கங்களும் மாநகராட்சியின் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கின்றன. இது பொங்கல் பண்டிகைக்குப் பின் இதுமேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை மாநகராட்சி குடியிருப்போரை “ஸ்ட்ராவா’’ ஆப்பை டவுன்லோடு” செய்து அதன்மூலம் தங்களுடைய சைக்கிள் ஓட்டுதல் மற்றும் நடைபயண நடவடிக்கைகளுக்கான தடங்களை ஜனவரி 26ஆம் தேதிக்கு முன்பாக தெரிந்து கொள்ளும் படி கேட்டுக் கொண்டுள்ளது. இதற்கிடையில் சென்னை மூன்றாவது மிகப்பெரிய எண்ணிக்கையிலான தேசிய அளவிலான நடைபயணம் மற்றும் சைக்கிள் ஓட்டும் போட்டிகளுக்கான பதிவை பதிவு செய்துள்ளது. சென்னை நகரின் குடிமக்களில் 1,458 குடியிருப்போர் இதில் பதிவு செய்துள்ளனர்.
சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஓட்டப்பந்தயங்களில் 181 கி.மீட்டர் தூரம் கடந்து இந்தப் போட்டியில் கலந்துகொள்பவர்களில் மூன்றாவது இடம் பெற்றுள்ளார். இதன் இறுதிப் போட்டிகளின் முடிவுகள் ஜனவரி 26ஆம் தேதிக்குப் பிறகு வெளியிடப்படும்.
இந்த நிகழ்ச்சி பல்வேறு மோட்டார் அல்லாத போக்குவரத்து தொடர்பாக சென்னை மாநகரில் உள்ள பல்வேறு வகையான வசதிகளுக்கான விழிப்புணர்வை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.