தமிழ்நாடு

தள்ளுவண்டி வியாபாரி மீது தாக்குதல்.. 7 பேர் மீது வழக்குப்பதிவு - பா.ஜ.க இளைஞரணி நிர்வாகி அதிரடி கைது!

தள்ளுவண்டி வியாபாரியைத் தாக்கிய வழக்கில் பா.ஜ.க இளைஞரணி நிர்வாகியை போலிஸார் கைது செய்தனர்.

தள்ளுவண்டி வியாபாரி மீது தாக்குதல்.. 7 பேர் மீது வழக்குப்பதிவு - பா.ஜ.க இளைஞரணி நிர்வாகி அதிரடி கைது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பிரதமர் மோடி அண்மையில் பஞ்சாம் மாநிலத்திற்குச் சென்றிருந்தார். அப்போது பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அவர் பங்கேற்பதாக இருந்து நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து பிரதமர் மோடியின் பாதுகாப்பில் பஞ்சாப் மாநில அரசு கவனம் செலுத்தவில்லை, அவர்களின் பாதுகாப்பு குறைபாடுகளே இதற்குக் காரணம் என கூறி தமிழக பா.ஜ.கவினர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் ஒருபகுதியாக, திருப்பூர் மாவட்டம் பல்லடம் பேருந்து நிலையம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது, தள்ளுவண்டியில் பழங்கள் விற்பனை செய்து வரும் முத்துசாமி என்பவர், பிரதமர் மோடியை விமர்சித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பா.ஜ.கவினர் முத்துச்சாமியை சரமாரியாகத் தாக்கினர்.

இதையடுத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் தாக்குதலில் ஈடுபட்ட பா.ஜ.க வினரை தடுத்து, தாக்குதல் நடத்தியவர்களையும், தாக்கப்பட்டவரையும் காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

இதில் இரு தரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இந்தச் சம்பவம் குறித்து தள்ளுவண்டி வியாபாரி முத்துச்சாமி மற்றும் 7 பா.ஜ.வினர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து பா.ஜ.க இளைஞரணி நிர்வாகி ரமேஷ் என்பவரை பல்லடம் போலிஸார் கைது செய்தனர்.

banner

Related Stories

Related Stories