முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று கோடம்பாக்கத்திலிருந்து அண்ணா அறிவாலயம் நோக்கி காரில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது வயதான தம்பதி, தன்னைப் பார்த்து கை அசைத்ததை கவனித்த முதல்வர், காரை நிறுத்தி இறங்கி அந்த தம்பதியருடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.
இச்சம்பவம் பொது மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
இதுபற்றிய விபரம் வருமாறு :-
சென்னையில் காரில் சென்று கொண்டிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சாலையில் நின்று கொண்டிருந்த வயதான தம்பதிகள் கை அசைத்து வணக்கம் தெரிவித்தனர். சென்னை கோடம்பாக்கத்திலிருந்து அண்ணா அறிவாலயம் நோக்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த வயதான தம்பதி முதலமைச்சருக்கு கை அசைத்து வணக்கம் செலுத்தினர்.
இதனைக் கவனித்த முதல்வர் அவர்கள், தனது காரை நிறுத்தி கீழே இறங்கி வயதான தம்பதிகளுக்கு பதில் வணக்கம் தெரிவித்தார். மேலும், வயதான தம்பதிகள் விடுத்த கோரிக்கையினையேற்று அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.
இதனால் அத்தம்பதியினர் மகிழ்ச்சி அடைந்தனர். வயதான தம்பதியினரின் கோரிக்கையை ஏற்று காரிலிருந்து கீழே இறங்கி அவர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டது பொது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.