தமிழ்நாடு

சுயதொழில் பயிற்சி அளிப்பதாகக் கூறி ரூ.5 கோடி மோசடி.. youtuber வீட்டை முற்றுகையிட்ட மக்கள் - நடந்தது என்ன?

சுயதொழில் பயிற்சி அளிப்பதாகக் கூறி ரூ.5 கோடி ஏமாற்றிய யூடியூப் சேனலின் பெண் நிர்வாகி மீது போலிஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

சுயதொழில் பயிற்சி அளிப்பதாகக் கூறி ரூ.5 கோடி மோசடி.. youtuber வீட்டை முற்றுகையிட்ட மக்கள் - நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கோவை மாவட்டம் சூலூரைச் சேர்ந்தவர் கோதை நாச்சியார். இவர் கோதை நாச்சியார் என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த யூடியூப் சேனலில் நாச்சியார் பணத்தை மிச்சப்படுத்தி நகை, துணி போன்றவற்றை எப்படி வாங்குவது என்பது போன்ற வீடியோக்களை வெளியிட்டுவருகிறார்.

இதனால், இவரின் வீடியோவை இல்லத்தரசிகள் பலரும் பார்த்து வந்துள்ளனர். மேலும் இவருக்கு பலரின் தொடர்புகளும் கிடைத்துள்ளது. இதைப் பயன்படுத்திக் கொண்ட கோதை, வீட்டிலிருந்தபடியே லட்சங்களில் சம்பாதிக்கலாம் என சுயதொழில் பயிற்சி அளிப்பதாகக் கூறியுள்ளார். மேலும் சுயதொழில் தொடங்க வங்கியில் கடன் பெற்றுத் தருவதாகவும் கூறியுள்ளார்.

சுயதொழில் பயிற்சி அளிப்பதாகக் கூறி ரூ.5 கோடி மோசடி.. youtuber வீட்டை முற்றுகையிட்ட மக்கள் - நடந்தது என்ன?

இதை நம்பி பலரும் சுயதொழில் பயிற்சிக்காகக் கட்டணம் செலுத்தியுள்ளனர். இப்படி இவர் 5 கோடி ரூபாய் வரை பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் அவர் கூறிய படி சுயதொழில் பயிற்சி எதுவும் கொடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்டவர்கள், கோதை நாச்சியாரின் வீட்டை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலிஸார் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களிடம் கூறி அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனர். மேலும், இந்த மோசடி தொடர்பாக போலிஸார் கோதை நாச்சியாரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories