சென்னை, வேளச்சேரியைச் சேர்ந்த சுச்சரித்தா மதனகோபால் (61) என்பவருக்கு சொந்தமான எண் 26 ரத்னபுரி லே-அவுட் என்ற முகவரியில் உள்ள ரூ.3 கோடி மதிப்புள்ள 4 பிளாட்டுகளை விற்பனை செய்து தருவதாக கூறி, அவரிடம் 4 பிளாட்டுகளுக்கும் பொது அதிகாரம் பெற்றுக் கொண்டு, அவருக்கு தெரியாமல் மேற்படி 4 பிளாட்டுகளை இராஜலட்சுமி மற்றும் கார்த்திக் ஆகியோருக்கு தலா 2 பிளாட்டுகள் வீதம் 4 பிளாட்டுகளை விற்பனை செய்துவிட்டு சுச்சரித்தாவிற்கு தரவேண்டிய விற்பனை தொகை ரூ.2,47,80,000/-ஐ தராமல் சிலர் ஏமாற்றி பணமோசடி செய்தது சம்பந்தமாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலிஸிடம் புகாழ் அளிக்கப்பட்டது. இதன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இவ்வழக்கில் தலைமறைவாக இருப்பவர்களை கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டதின் பேரில், கூடுதல் காவல் ஆணையாளர் தேன்மொழி, I.P.S., வழிகாட்டுதலில், துணை ஆணையாளர் K.மீனா, மேற்பார்வையில் கூடுதல் காவல் ஆணையாளர் அசோகன் அறிவுரையின் பேரில் உதவி ஆணையாளர் ஜான்விக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இதில், ஏற்கனவே தலைமறைவாக இருந்து வந்த இராமகிருஷ்ணன் என்பவரை கடந்த 18.10.2021 அன்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்டு தலைமறைவாகயிருந்த மற்றொரு குற்றவாளியான பைனான்சியர் வளசரவாக்கம் சப்தகிரிநகரைச் சேர்ந்த அங்கப்பன் என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று (24.11.2021) கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட குற்றவாளி அங்கப்பன் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.