மத்திய பிரதேச மாநிலம், குணா மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞருக்கும், ராஜஸ்தானைச் சேர்ந்த பெண்ணுக்கும் அண்மையில் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து அந்தப் பெண் தனது கணவருடன் வசித்து வந்தார். மேலும் 12ஆம் வகுப்பு படிக்கும் அந்த இளைஞர் தினமும் பள்ளிக்குச் சென்று வந்துள்ளார்.
இந்நிலையில், மகன் பள்ளிக்கு சென்ற நேரத்தில் வீட்டிலிருந்த மருமகளை மிரட்டி மாமனார் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், இதுகுறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.
பின்னர், இந்தச் சம்பவம் குறித்துப் பாதிக்கப்பட்ட பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதில், தனது கணவர் பள்ளிக்குச் சென்ற நேரத்தில் மாமனார் தன்னை மிரட்டி வன்கொடுமை செய்தார் என்றும் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக தெரிவித்துள்ளார்.
மேலும், தனது மாமனார் பல சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருப்பதாகவும், குடும்பத்தில் இருக்கும் பெண்களை மிரட்டி வன்கொடுமை செய்துள்ளார் என்றும் அந்தப் பெண் புகாரில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அந்த நபர் செல்வாக்கான அரசியல் கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் இன்னும் போலிஸார் அவரை கைது செய்யவில்லை எனவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.