தமிழ்நாடு

’உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வருவேன்’ -முதலமைச்சர் பேட்டிக்கு சிறப்பு செய்தியை தொகுத்த தெலுங்கு நாளேடு

தமிழ்நாட்டு மக்கள் மழை வெள்ளத்தினால் அவதிப்படுவதற்கு மிக முக்கிய காரணம் கடந்த ஆட்சியாளர்கள் செய்த ஊழல்தான்.

’உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வருவேன்’ -முதலமைச்சர் பேட்டிக்கு சிறப்பு செய்தியை தொகுத்த தெலுங்கு நாளேடு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பார்வையிட்டு செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்த செய்தியினை தெலுங்கு மொழியில் இருந்து வெளிவரும் பிரபல ‘சாக்ஷி’ தினசரி பத்திரிகை, சிறப்பு செய்தியாக வெளியிட்டு இருந்தது.

‘சாக்ஷி’ தெலுங்கு பத்திரிகை கடந்த 15ஆம் தேதி (திங்கள்கிழமை) வெளியிட்ட சிறப்பு செய்தி வருமாறு:-

தமிழ்நாட்டு மக்கள் மழை வெள்ளத்தினால் அவதிப்படுவதற்கு மிக முக்கிய காரணம் கடந்த ஆட்சியாளர்கள் செய்த ஊழல்தான். கடந்த ஆட்சியில் எந்தப் பணிகளும் நடக்காத காரணத்தினால் மக்கள் இன்றைக்கு அவதிக்குள்ளாகியுள்ளனர். கடந்த ஆட்சியில் ஊழல் மூலமாக அரசு கஜானாவை காலி செய்த ஆட்சியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் சொல்கிறார்.

தற்போதைய முதல்வர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் எங்கள் மீது பழியை சுமத்துகிறார் என்று கடந்த ஆட்சியாளர்கள் சொல்கிறார்கள்’’ என்று ‘லீட்’ செய்தியாக வெளியிட்ட ‘சாக்ஷி’ பத்திரிகை தொடர்ந்து, வெளியிட்ட செய்தி வருமாறு:-

தமிழகத்தில் பலத்த மழை காரணமாக மாநிலம் முழுவதும் வெள்ளக் காடாக மாற முன்னாள் ஆட்சியாளர்கள்தான் காரணம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூறியுள்ளார். ஆனால் கடந்த ஆட்சியின் ஊழலை வெளிச்சத்திற்குக் கொண்டுவர விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூறியுள்ளார்.

சென்னையில் கழிவு நீர் அடைப்பு, இதனால் எங்கும் மழைநீர் சூழ்ந்து அனைத்துப் பகுதிகளும் நீரில் மூழ்கியது. வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. சென்னை முழுவதும் வெள்ளக்காடாக மாறியதற்கு கடந்த ஆட்சியாளர்கள் தூர் வாராததே காரணம் என்று பொதுமக்கள் பரவலாக விமர்சித்து வருகிறார்கள்.

இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மழை வெள்ளத்தை ஆய்வு செய்தநமது முதல்வர், "ஸ்மார்ட் சிட்டி’’ என்ற பெயரில் பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் கடந்த ஆட்சியின்போது நடைபெற்றிருக்கிறது என்று கூறினார். ஆனால் முன்னாள் முதலமைச்சர் பழனிசாமியோ எங்கள் மீது தவறான தகவல்களை முதலமைச்சர் கூறியுள்ளார். அவர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கத் தவறிய காரணத்தினால் சென்னை வெள்ளக் காடானது. ஆனால் எங்கள் மீது இப்போது பழியைச் சுமத்துகிறார் என்று கூறியுள்ளார்.

இதே குற்றச்சாட்டைத்தான் ஓ.பன்னீர்செல்வமும் கூறுகிறார். அவர் "முதல்வர், அ.தி.மு.க. ஆட்சி மீது பழியைச் சொல்லிட்டு தப்பிக்க முயல்கிறார்’’ என்று சொல்கிறார். மழைக் காலத்திற்குப் பின் கடந்த ஞாயிற்றுக்கிழமை (14.11.2021) கொளத்தூர், திரு.வி.க. நகர், வில்லிவாக்கம், பெரம்பூர் ஆகிய பகுதிகளை முதல்வர் பார்வையிட்டார். அந்தச் சமயத்தில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்த போது, எதிர்க்கட்சி கூறிய குற்றச்சாட்டுக்கு நான் பதில் அளித்து நேரத்தை வீணாக்க விரும்பவில்லை.

தமிழக மக்களுக்குத் தேவையான நலத் திட்டங்களை, உதவிகளை செய்வேன். நான் என்ன செய்வேன் என்று மக்களுக்குத் தெரிந்ததால்தான் என்னை முதலமைச்சர் பொறுப்பில் உட்கார வைத்துள்ளனர். எனக்கு வாக்கு அளித்த மக்களுக்கும், வாக்களிக்காத மக்களுக்கும் சரி சமமாக நலத்திட்ட உதவிகள் வழங்குவது மட்டுமின்றி அனைவருக்கும் அனைத்தும் சேரும்படி பார்த்துக் கொள்வதுதான் என் கடமை.

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நடந்த ஊழல், அநியாயம், அக்கிரமங்களை விசாரணைக் கமிஷன் அமைத்து கண்டுபிடித்து எங்கு தப்பு நடந்தது? யார் தவறு செய்தார்கள்? என்று மக்களுக்குத் தெரியப்படுத்துவேன். விசாரணைக் கமிஷன் மூலமாக தவறு செய்தவர்கள் கண்டறியப்பட்டு கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள் என்று கூறினார். இவ்வாறு ‘சாக்ஷி’ பத்திரிக்கை சிறப்பு செய்தி வெளியிட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories