மற்ற மாநில முதல்வர்கள் மட்டுமின்றி உலகமே திரும்பிப் பார்க்கும் வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சி செய்து வருகிறார்’’ என்று தெலுங்கு 10-Tv தொலைக்காட்சி செய்தி ஒளிபரப்பில் புகழாரம் சூட்டியுள்ளது.
(தெலுங்கானா மாநிலத்தை தலைமையிடமாகக் கொண்ட 10-Tv எனும் புகழ்பெற்ற தெலுங்கு மொழி தொலைக்காட்சி, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் செயல்பாடுகள் குறித்த ஒரு சிறு தொகுப்பினை ஒளிபரப்பியிருந்தது. அதனை நண்பர் ஒருவர் உதவியுடன் தமிழில் மொழி பெயர்த்து படித்துப் பார்த்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன் என்று முதல்வர் அவர்களுக்கு ப.தாயகம் கவி எம்.எல்.ஏ. அனுப்பியுள்ளார்.)
தெலுங்கு 10-Tv ஒளிப்பரப்பிய அந்தச் செய்தி வருமாறு :-
``முதல்வர் பதவி என்றால் என்னவென்று தெரியுமா? உனது வாழ்நாளில் ஒரு நாளாவது முதல்வர் அலுவலக அறை வாசற்படியை மிதித்தது உண்டா?
நீ ஒரு நாள் வந்து பார்! ஒரு நாளைக்கு எத்தனை பேர் என்னை வந்து சந்திக்கின்றனர். எத்தனை சந்தேகங்கள், எத்தனை கண்ணீர்கள், எத்தனை பிரச்சினைகள், எத்தனை போராட்டங்கள், எத்தனை சிக்கல்கள், எத்தனை டென்ஷன்கள்.
முதல்வராய் இருப்பவருக்குதான் அந்தக் கஷ்டம் தெரியும். ``ஒரு நாள் நீ முதல்வராய் இருந்து பார்!’’ என்று நடிகர் ரகுவரன் சேலன்ஜ் சொல்ல, ஒருநாள் முதல்வராய் இருந்து ஆயிரம் நன்மைகள் செய்தார் நடிகர் அர்ஜுன். 24 மணி நேர முதல்வராய் இருந்து ஆயிரம், ஆயிரம் நன்மைகள் உருவாக்கியதை நாம் சினிமாவில் பார்த்தோம்.
ஒவ்வொரு நாளும் மக்களுக்காகவே உழைக்கிறார்!
ஆனால், இன்று தமிழ்நாடு கண்ட முதல்வர் ஒவ்வொரு நொடி, ஒவ்வொரு மணி நேரம், ஒவ்வொரு நாளும் 24*7 என்று ஒவ்வொரு மணித்துளியும் மக்களுக்காகவே மக்கள் நலனுக்காகவே உழைத்துக் கொண்டிருக்கிறார்! மக்களுக்காக ஓய்வின்றி உழைக்கிறார். முதல்வர் பதவி என்றால் அவர் செல்லும் வழித்தடம் நிறுத்தி வைக்கப்படும். ஆனால், நடுரோட்டில் சென்ற பேருந்தை நிறுத்தியதும். யாரோ வந்து ஏறி பயணிக்கப் போகிறார் என்று மக்கள் நினைக்க. முதல்வரே பேருந்தில் ஏறி மக்களோடு மக்களாக பயணித்து அனைவரையும் வியக்கவைத்தார். முதல்வர் பதவி என்றால். அவர் சிம்மாசனத்தில் அமர்ந்து அதிகாரம் செய்து சொகுசாய் இருப்பதல்ல.
சிறப்பான ஆட்சி செய்து வருகிறார்!
ஏழையின் குடிசைக்கு சென்று அவர்களின் குறைகளை கேட்டு, மக்களோடு மக்களாக பயணிப்பது. மூத்த அரசியல் தலைவர்களையும் அதிகாரிகளையும் தன்னுடன் அரவணைத்து, அவர்களின் கருத்துகளை கேட்டு சிறப்பான ஆட்சி செய்து வருகிறார் .
எளிமையின் உருவகமாகத் திகழ்கிறார்!
எளிமையின் உருவமாக (Man ofSimplicity) திகழ்கிறார் ஸ்டாலின். கலைஞர், ஜெயலலிதா போன்ற தலைவர்கள் தமிழகத்தை ஆண்டு உள்ளார்கள். அவர்களையும் மிஞ்சிவிட்டார் ஸ்டாலின். கவனத்தில் வையுங்கள். இந்த தலைமுறை மட்டுமல்லாமல் அடுத்த தலைமுறையும் பேசும்படி செவ்வனே தன் பணி செய்து வருகிறார் ஸ்டாலின். காவல் நிலையம், பள்ளி, பொதுப்பணி, மக்கள் குறை தீர்த்தல் போன்ற அனைத்திலும் மக்களோடு மக்களாக நின்று பணி செய்து தனித்துவம் பெறுகிறார் ஸ்டாலின்.
அவரின் தொண்டினை சொல்வது மட்டுமல்லாமல். நீங்களே பாருங்கள் இந்தப் பதிவை. முதல்வர் என்றால் பல்வேறு விமர்சனங்கள் எழும். ஆனால், எந்தவொரு விமர்சனமும் ஸ்டாலின் வீட்டு வாசலைக்கூடத் தொடமுடியாது. ஏனெனில், ``தமிழ்நாடு Care of Stalin’’ என்று அவர் தன் முகவரியை மாற்றிக் கொண்டார்.
முதல்வர்களில் இரு வகை.
1. மக்கள் பணி செய்பவர்.
2. மக்களோடு மக்களாக வாழ்பவர்.
இதில் ஸ்டாலின் இரண்டாம் வகை.
1. தன்னுடைய ஆட்சியில் புதிய பல சாதனைகளைப் படைக்கப் போகிறாரா!
2. தனக்கென தனிமுத்திரை படைக்கப் போகிறாரா!
3. ஸ்டாலினைப் பார்த்துமற்ற முதல்வர்கள் என்னகற்றுக் கொள்ள வேண்டும்.
4. ஸ்டாலின் ஸ்டைலில் தமிழ்நாட்டை போன்று மற்ற முதல்வரின் முடிவு என்ன?
இவைகள் எல்லாம் ஸ்டாலினை பற்றி மக்கள் மத்தியில் மட்டுமல்லாமல் உலகமே பேசும் கருத்துகள்.
அனைவரும் வியக்கும்வண்ணம் ஆட்சி செய்கிறார்!
ஸ்டாலின் செய்வது அரசியல்அல்ல; மக்கள் பணி!
அனைவரும் வியக்கும் வண்ணம் ஆட்சி செய்துவருகிறார் ஸ்டாலின். அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வியிலும் முன்னுரிமை அளித்து ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்கிறார். நீட் தேர்வுக்காக போராடியுள்ளார்.
முதல்வர் வருகிறார் என்றால் அவர் செல்லும் வழியில் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து தடைசெய்யப்படும். ஆம்புலன்ஸ் என்றாலும் நின்றுதான் செல்லவேண்டும் என்ற நிலை மாறி எந்த ஒரு ஆடம்பரமும் ஆர்ப்பரிப்புமின்றி எளிமையாக சாதித்து வருகிறார் ஸ்டாலின்.
ஜெயலலிதா அம்மையார் புகைப்படம் போட்ட புத்தகப் பையில் அந்த புகைப்படத்தை நீக்காமல் அப்படியே மாணவர்களுக்கு வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டார். அம்மா உணவகம் தொடர்ந்து சிறப்பாக செயலாற்ற செய்துள்ளார். சட்டமன்ற உறுப்பினர்களும் பூங்கொத்து மற்றும் புத்தகம் தவிர எந்த ஒரு பொருளையும் பரிசாக பெறக்கூடாது.
மதிய உணவை வீட்டிலிருந்துகொண்டு வந்து சாப்பிட வேண்டும் என்று அன்பாக வேண்டுகோள் விடுத்தார். அதன்படி அனைவரும் முதல்வர் வழியில் பணியாற்றி வருகிறார்கள். தமிழ்நாடு மட்டுமின்றி மற்ற மாநில முதல்வர்களும், ஏன் உலகமே திரும்பி பார்க்க செய்து அசத்திவருகிறார்.
தனக்கென உரிய தனி ஸ்டைலில் பணியாற்றி வருகிறார். இவரை பார்த்து மற்ற முதல்வர்கள் கற்றுக் கொள்வார்களா? இவரின் Man of Power என்னவென்று சொல்வது. இவ்வாறு 10 TV தொலைக்காட்சி ஒளிப்பரப்பியுள்ளது.