தமிழ்நாடு

வெளுத்து வாங்கும் கனமழை... நாளை 16 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - எந்தெந்த மாவட்டங்கள்?

தொடர் கனமழை காரணமாக நாளை 16 மாவட்டங்களில் பள்ளி, கல்லுரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளுத்து வாங்கும் கனமழை... நாளை 16 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - எந்தெந்த மாவட்டங்கள்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தொடர் கனமழை காரணமாக நாளை 16 மாவட்டங்களில் பள்ளி, கல்லுரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்று இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் வட தமிழக கடலோரப் பகுதியில் நிலைகொண்டுள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காலை சென்னைக்கு அருகில் கரையை கடக்கக்கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, காஞ்சிபுரம், திருப்பத்தூர், வேலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், பெரம்பலூர், சேலம், நீலகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செங்கல்பட்டு, அரியலூர், கடலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழையின் தீவரத்தைப் பொறுத்து மற்ற மாவட்டங்களின் கல்வி நிறுவனங்களுகும் விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories