தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டிருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவடைந்துள்ளதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழ்நாட்டில் கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தென்கிழக்கு மற்றும் அழை ஒட்டிய தென் மேற்கு வங்க கடலில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தெற்கு ஆந்திரா - வட தமிழ்நாடு கடற்கரை பகுதியை ஒட்டி நகர்ந்து வருகிறது.
இது அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. இதனால் ராயலசீமா, தெற்கு கடலோர ஆந்திரா, வட தமிழ்நாட்டு ஆகிய பகுதிகளில் அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.
மேலும் தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மேற்கு மத்திய வங்கக்கடல், தமிழ்நாடு, ஆந்திர கடலோரப் பகுதிகளில் மணிக்கு 46 முதல் 65 வரை மணிக்குப் பலத்த காற்று வீசக்கூடும். இதனால் மீனவர்கள் நவம்பர் 19ம் தேதி வரை கடற்கரைக்குச் செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.