நடிகர் ரஜினிகாந்த் மகன் சவுந்தர்யா Hoote குரல் வழி செயலியை உருவாக்கினார். இதைக் கடந்த 25ம் தேதி நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார்.
இந்த குரல் வழி செயலியில் பலரும் இணைந்து தங்களின் கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள். இந்த செயலி பலரின் வரவேற்பைப் பெற்று வருகிறது.
சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நடிகர் ரஜினிகாந்த், தான் நலமாக இருப்பதாக hoote குரல் வழி செயலியில் ஆடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இது அவரின் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் hoote குரல் வழி செயலியில் இணைந்துள்ளதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டரில்,"தமிழ்நாட்டிலிருந்து தொடங்கப்பட்டுள்ள #Hoote சமூக வலைத்தளத்தில் முதலமைச்சர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ பக்கம் தொடங்கப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார். மக்களின் குரலுக்கு இந்த அரசு எப்போதும் செவி சாய்க்கும் எனவும் பதிவிட்டுள்ளார்.