தமிழ்நாடு

விண்ணை முட்டும் டீசல் விலை; கேக் வெட்டி துக்கத்தை வெளிப்படுத்திய லாரி உரிமையாளர்கள்!

டீசல் விலை 100 ரூபாயை கடந்துள்ளதால் ஏற்பட்ட மன வேதனையை கேக் வெட்டிய லாரி உரிமையாளர் சங்கத்தினர்.

விண்ணை முட்டும் டீசல் விலை; கேக் வெட்டி துக்கத்தை வெளிப்படுத்திய லாரி உரிமையாளர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தேனி மாவட்டத்தில் டீசல் விலை 100 ரூபாயை தாண்டி 100 ரூபாய் 5 பைசாவாக விற்கப்படுகின்றது. மேலும் பெட்ரோல் விலை 104 ரூபாயை தொட்டுள்ளது. இந்தியா முழுவதும் நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால் அனைத்து விலையும் தொடர்ந்து ஏற்றம் கண்டு வருவதோடு பெட்ரோல், டீசல் விலை உயர்வால் லாரி, பேருந்து, கார் உள்ளிட்ட வாகன உரிமையாளர்கள் வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.

தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி எதிர் கட்சிகள், வாகன உரிமையாளர்கள் போராடி வந்தாலும் ஒன்றிய பாஜக அரசு விலை உயர்வை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்கின்றது.

இந்நிலையில் ஒரு லிட்டர் டீசல் விலை 100 ரூபாயை கடந்துள்ளதால் லாரி உரிமையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள மன வேதனையை மகிழ்சியுடன் கொண்டாடும் விதமாக பெரியகுளம் லாரி உரிமையாளர் சங்கத்தினர் பெட்ரோல் பங்க் முன்பாக கேக் வெட்டி கொண்டாடி ஒன்றிய அரசுக்கு தங்கள் வருத்ததை மகிழ்ச்சியாக தெரிவிப்பதாக கூறி வெட்டிய கேக்கை வாகன ஓட்டிகளுக்கு வழங்கி தங்கள் வருத்ததை தெரிவித்தனர்.

டீசல் விலை உயர்வு குறித்து லாரி உரிமையாளர் சங்க நிர்வாகி கூறுகையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க கூறியும், GST வரி விதிப்புக்குள் கொண்டுவர கோரி பல்வேறு போராட்டங்களை நடத்திய நிலையில் ஒன்றிய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் 100 ரூபாய்க்கு மேல் டீசல் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள மன வேதனையை கேக் வெட்டி மகிழ்சியுடன் கொண்டாடினாலாவது மத்திய அரசு பெட்ரோல், டீல்சல் விலை உயர்வை குறைக்கும் நடவடிக்கை எடுபார்கள் என்று நம்பி நூதன முறையில் டீசல் விலை உயர்வை மகிழ்சியுடன் கொண்டாடி வருத்தத்தை வெளிப்படுத்தி வருவதாக தெரிவித்தனர்.

banner

Related Stories

Related Stories