இந்தியா

“சுதந்திரத்திற்கு போராடாத பா.ஜ.க கும்பல் ‘தேசபக்தி’ பற்றி பேசத் தகுதியில்லை” : உத்தவ் தாக்கரே சாடல்!

சுதந்திரத்திற்கு போராடாத பா.ஜ.க கும்பல் ‘தேசபக்தி’ பற்றி பேசத் தகுதியில்லை என மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே சாடியுள்ளார்.

“சுதந்திரத்திற்கு போராடாத பா.ஜ.க கும்பல் ‘தேசபக்தி’ பற்றி பேசத் தகுதியில்லை” : உத்தவ் தாக்கரே சாடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மகாராஷ்டிராவில் நடைபெற்ற தசரா நிகழ்ச்சியை அம்மாநில முதல்வரும் சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே காணொளி வாயிலாக விழாவைத் தொடங்கிவைத்து உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் தோல்வி அடைந்த பா.ஜ.க தற்போது, மகாராஷ்டிராவின் பெருமைகளை களங்கப்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. மாநில போலிஸார் இதுவரை 150 கோடி மதிப்பிலான போதைப் பொருளை பறிமுதல் செய்துள்ள நிலையில், பிரபலங்களின் கைதில் மட்டும் பா.ஜ.க கவனம் செலுத்தி வருகிறது. இதற்கு பின்னால் உள்நோக்கம் உள்ளது. முந்த்ரா துறைமுகம் எங்குள்ளது, அங்கு பறிமுதல் செய்யப்பட்ட கோடிக்க ணக்கான ரூபாய் மதிப்புள்ள போதை பொருள் எங்கே?

குறிப்பாக, பலமுறை ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்தும் அவர்களால், ஒன்றும் செய்யமுடிவில்லை. எங்களது அரசு அடுத்த மாதம் 2 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளது. முடிந்தால் ஆட்சியைக் கவிழ்த்துப் பாருங்கள். முன்னால் நின்று நேருக்கு நேராக மோதுங்கள். மாறாக, அமலாக்கத்துறை போன்ற ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகளைப் பயன்படுத்தி எங்கள் கூட்டணி கட்சிகளுக்கு பா.ஜ.க சவால் விடக்கூடாது.

இந்துத்துவா மற்றும் மதத்தின் பெயரை பயன்படுத்தி ஆட்சிக்கு வந்தவர்கள், தற்போது பிரிட்டிஷ் பிரிவினைவாத கொள்கையை கையில் எடுத்துள்ளனர். பா.ஜ.க விடுதலை போராட்டத்தில் எதையும் செய்யவில்லை. பாரத் மாதாகி ஜெய், வந்தே மாதரம் என முழங்குவதால் மட்டும் பா.ஜ.க, எல்லை காக்கும் போர் வீரனைவிட தேசப்பற்று மிக்கவராக மாறிவிட முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories