தமிழ்நாடு

“இரு குழுக்களிடையே மோதலை உண்டாக்க முயற்சி” : பா.ஜ.க கல்யாணராமன் கைது - சைபர் கிரைம் போலிஸார் அதிரடி !

இரு குழுக்களிடையே மோதலை உருவாக்கும் விதமாக ட்விட்டரில் கருத்து பதிவிட்டதாக பா.ஜ.க நிர்வாகி கல்யாணராமனை போலிஸார் கைது செய்துள்ளனர்.

“இரு குழுக்களிடையே மோதலை உண்டாக்க முயற்சி” : பா.ஜ.க கல்யாணராமன் கைது - சைபர் கிரைம் போலிஸார் அதிரடி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பா.ஜ.கவைச் சேர்ந்த கல்யாணராமன் தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து ஆபாசமான கருத்துக்களையும், அருவருக்கத்தக்க வகையிலும் பேசுவதையும் தனது வாடிக்கையாக வைத்துள்ளார்.

அதுமட்டுமல்லாது முன்னதாக, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கல்யாணராமன், நபிகள் நாயகத்தை பற்றியும், அவரது குடும்பத்தினரையும் அவதூறாக பேசினார். அதன்பின்னர் எழுந்த கண்டனங்களை தொடர்ந்து தேசிய ஒருமைபாட்டை சீர்குலைக்க முயற்சித்தல் உட்பட 8 பிரிவுகளின் கீழ் போலிஸார் வழக்குபதிவு செய்து அவினாசி சிறையில் அடைத்துள்ளனர்.

பின்னர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அதுகுறித்த நடந்த விசாரணையில் குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இந்நிலையில், மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

“இரு குழுக்களிடையே மோதலை உண்டாக்க முயற்சி” : பா.ஜ.க கல்யாணராமன் கைது - சைபர் கிரைம் போலிஸார் அதிரடி !

இரு குழுக்களிடையே மோதலை உருவாக்கும் விதமாகவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மற்றும் மருத்துவர் ஷர்மிளா குறித்தும் அவதூறு கருத்துக்களை பேசி வந்த பா.ஜ.கவைச் சேர்ந்த கல்யாணராமன் கோபிநாத் என்பவர் கொடுத்த புகாரின்பேரில், அவர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

பின்னர் சென்னை வளசரவாக்கம் தேவி குப்பம் அன்பு நகர் பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இருந்த கல்யாணராமனை மத்திய சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலிஸார் நள்ளிரவில் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தொடர்ந்து அவதூறு கருத்துக்களை பேசி வரும் பா.ஜ.க கல்யாணராமன் மீது நீதிமன்றம் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories